Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ரஜினி அரசியல் பஞ்ச் திரைப்பட பாடலானது..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் 31ம் தேதி புதிய கட்சி தொடங்கும் தேதி அறிவிப்பதாகவும் ஜனவர் மாதம் கட்சி தொடங்கப்படும் என்றும் அறிவித்தார். அப்போது எல்லாத்தையும் மாத்துவோம் என்று பஞ்ச் வசனத்தை ஹேஷ் டேக் ஆக பகிர்ந்தார். அது திரைப்பட பாடல் ஆகி உள்ளது.

‘எல்லாத்தையும் மாத்துவோம்’;
எல்லாரையும் வாழவைப்போம் என்ற பாடலை பவுடர் படத்திற்காக இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி எழுதியுள்ளார்

‘பவுடர்’ படத்தின் வாயிலாக பிரபல முன்னனி சினிமா பிஆர்ஓ- நிகில் முருகனை நடிகராக அறிமுகமாக்குகிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி.

இவர், தனது முதல் படமான ‘தாதா 87’-ல் உலகநாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசனை ஒரு டானாக அறிமுகப்படுத்தி மக்கள் மனங்களை வென்றவர். தொடர்ந்து பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தில் நடிகர் விக்ரமின் தங்கைஅனிதாவின் மகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தி இயக்கி வருகிறார். அவரின் மூன்றாவது படமாக உருவாகி வருகிறது ‘பவுடர்’. இப்படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடிக்கிறார். மற்றும் மனோபாலா,வையாபுரி,
ஆதவன், அகல்யா வெங்கடேசன்உள்ளிட்ட பலர் நடிக்க
இந்நிலையில், படத்தில் வலிமை மிக்க முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகிறார், பிஆர்ஓ ‘உள்ளுர் நாயகன் ‘நிகில் முருகன்.
சென்னை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் பவுடர் படத்திற்காக இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி நடிகர் ரஜினிகாந்த் பேசிய ‘எல்லாத்தையும் மாத்துவோம்’ வசனத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

பாடல் குறித்து  இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. கூறியதாவது:

தாத87 படத்தில் ஒரு நிமிஷம் ‘தலை சூத்திடுச்சி ‘ பேசிய வசனம் மையமாக வைத்து நான் எழுதிய பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றது . தற்சமயம்
எல்லாத்தையும் மாத்துவோம்
எல்லாரையும் வாழவைப்போம்
எல்லாரையும் சேக்குறோம்
இனி ‘எல்லாத்தையும் மாத்துவோம் ‘

என்று  ரஜினிகாந்த் பேசிய வசனம் பவுடர் படத்துக்கு  பொருத்தமாக இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் ரசிகனாக பாடல் எழதியதில் மகிழ்ந்தேன்.

இவ்வாறு விஜய் ஸ்ரீ ஜி கூறினார்.

பவுடர் படத்தின் ஒளிப்பதிவு- ராஜா பாண்டி ஆர்.பி. கதை,திரைக்கதை வசனம், இயக்கம் விஜய்ஶ்ரீஜி. ஜி மீடியா நிறுவனம் தாயரிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து உள்ள நிலையில் 2021 பவுடர் திரையில் வெளியாகும்.

Related posts

Sivaranjaniyum Innum Sila Pengallum streaming on SonyLIV from Nov 26th..

Jai Chandran

ருத்ரன் (பட விமர்சனம்)

Jai Chandran

Mahesh Babu, Trivikram Joining Togeather Again

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend