கொரோனா 2ம் அலைபரவா மல் பரவலை இருக்க கடந்த 10-ந் தேதி முதல் வரும் 24-ந் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. ஆனால் அதை பெரிதாக கருதாமல் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது.
கொரோனா பரவலும் அதிகரித்தது. இது குறித்து அரசுக்கு புகார் வந்தது. இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்றுமுதல் (சனிக்கிழமை) ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக் கப்படுகிறது
அதன்படி மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் வினியோகம் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற கடைகள் திறக்க அனுமதி கிடையாது.
டீ கடைகளுக்கு அனுமதி கிடையாது
ஏ.டி.எம்., பெட்ரோல் டீசல் பங்க்குகள்வழக்கம்போல் செயல்படும்.
ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப் படும்.
மளிகை, பலசரக்கு, காய்கறிகளை வாங்க அதிக தூரம் செல்லக்கூடாது.
காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகளுக்கு அனுமதி கிடையாது.
மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும்.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோ ருக்கு இ-பதிவு முறை கட்டாயம்.
திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும்.
17-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் இ பதிவு முறை நடைமுறைக்கு வருகிறது.
ஞாயிற்றுக் கிழமைகளில் (16 மற்றும் 23-ந் தேதி) முழு ஊரடங்கு அமல்படுத் தப்படும்.