Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லைசென்ஸ் (பட விமர்சனம்)

படம்: லைசென்ஸ்

நடிப்பு: ராஜலட்சுமி (பாடகி நடிகையாக அறிமுகம்), ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ கருப்பையா,  கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தான்யா, அனன்யா, வையாபுரி, நமோ நாராயணான்,

தயாரிப்பு : என்.ஜீவானந்தம்

இசை : பைஜூ ஜாக்கப்

ஒளிப்பதிவு: காசி விஸ்வநாதன்

இயக்கம்: கணபதி பால முருகன்

பி ஆர் ஓ: கே. எஸ். கே. செல்வா

சிறுவயதில் போலீஸ் ஆகவேண்டும் என்று எண்ணும்  பாரதி (ராஜலட்சுமி)  பள்ளி ஆசிரியை ஆகிறார். பெண் களுக்கு இழைக்கப்படும் பாலியல்  துன்புறுத்தலை துணிச்சலாக தட்டிக்  கேட்கிறார்  சிறுமி ஒருவருக்கு  பாலியல்  துன்புறுத்தல் அளித்த தொழில் அதிபரை எதிர்த்து புகார் தருகிறார். அதே சமயம் தனக்கு துப்பாக்கி  லைசென்ஸ் கேட்டு  மனு செய்கிறார். போலீசார் அனுமதி தராத நிலையில் அதை எதிர்த்து   கோர்ட்டுக்கு செல்கிறார் பாரதி.  கோர்ட்டில் அவருக்கு லைசன்ஸ் தர அனுமதி  அளித்ததா  என்பதே கிளைமாக்ஸ்.

என்ன மச்சான்.. பாடல் புகழ் ராஜலட்சுமி இப்படம் மூலம் கதையின் நாயகியாக அறிமுக மாகி இருக்கிறார். வேடத்துக்கு ஏற்ப முறைப்பும் கோபமும் காட்டி நடித்திருக்கிறார்.  ஆனால் உடல்மொழி நடிப்பில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்  எந்த  வசனம் பேசும்போதும் ஸ்டிப்பாக உடலை வைத்துக்கொண்டு இருப்பதால் வசனங்களை  ஒப்பிப்பதுபோல் இருக்கிறது.

கோர்ட் காட்சிகளில் போல்டான நடிப்பில் ஷாக் தரும் ராஜலட்சுமி கோர்ட்டில் ஆஜராகும் மந்திரி பழ கருப்பையாவை பார்த்து “உங்கள் கன்னத்தில் நான் அறைந்தால் எப்படி இருக்கும்? ” என்று நீதிபதி முன்னிலையில் கேட்டு ஷாக் தருகிறார் .

ராஜலட்சுமியின்  தந்தையாக ராதாரவி நிதானம் தவறாமல் நடித்து மனதில் நிற்கிறார். ராஜலட்சுமி தன் சொந்த மகள் இல்லை என்று கூறும் ரவி அவர் கள்ளிப்பால் விஷயத்துக்கு தப்பிய குழந்தை என்ற உண்மையை உடைப்பதும் அதை கண்டு கண்கலங்கும் ராஜலட்சுமி 14 வருடம் பேசாமிலிருந்த தந்தை ராதாரவியிடம் பேசுவது நெகிழ  வைக்கிறது.

கோர்ட் காட்சியில்  வக்கீல்களாக மோதிக்கொள்ளும் என் ஜீவானந்தம், விஜய் பாரத் வாதங்கள் கணீர் . நீதிபதி கீதா கைலாசம் குறுக்கு கேள்விகளும் வாதங்களை வேகமெடுக்க வைக்கிறது.

சிறுவயது பாரதியாக வரும் அபி நட்சத்திரா பளீர் நடிப்பில் பிரகாசிக்கிறார். தன்னை சுற்றி வளைக்கும் ரவுடிகளிடம்  ஆக்ஷன் அதிரடி காட்டுகிறார்.

என்.ஜீவானந்தம்  படத்தை தயாரித்திருக்கிறார்.

பைஜூ ஜாக்கப் இசை காட்சியோடு ஒன்றி நிற்கிறது

காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு தெளிவு.

சிறுமிகள் பாலியல்  துன்புறுத்தல் என்று பல படங்கள் வந்திருந் தாலும் அந்த கருவுக்கு புதிய பரிமாணம் கொடுக்கும் வகையில். பெண்கள் தங்களை தற்காத்துக். கொள்ள துப்பாக்கி லைசென்ஸ் தர வேண்டும் என்ற புதிய அதிரடியை கிளப்பி  லைசென்ஸ் படத்தை  விவாதத்துகுரிய படமாக்கி இருக்கிறார் இயக்குனர் கணபதி பால முருகன்.

எதிர்பார்ப்பில்லாமல் செல்லும் சில  படங்கள்  அட, நல்ல படமா இருக்கே என்று எண்ண வைக்கும் அந்த வரிசையில் ஒரு படம்தான் தலைசென்ஸ்.

லைசென்ஸ் – பெண்களும் பெற்றோரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

 

 

 

 

Related posts

ஜெய்பீம் (பட விமர்சனம்)

Jai Chandran

போப் 16ம் பெனடிக் மறைவுக்கு சரத்குமார் இரங்கல்

Jai Chandran

அருண் குமாரசாமி இசையில், வைக்கம் விஜயலட்சுமி பாடிய பளபள பப்பாளிக்கா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend