தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு சட்டமன்ற தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி ஒரே கட்டமாக இருமாநிலங் களிலும் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் வேகமாக செய்து வருகிறது. கட்சி களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியும் நடக்கிறது.
அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியடும் தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொகுதிகள் எண்ணிக்கை வழங்குவதில் இருத்ரப்பிலும் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
previous post