படம் : கார்பன்
நடிப்பு: விதார்த், தான்யா பாலகிருஷ்ணன், மாரிமுத்து, மூணாறு ரமேஷ், மூர்த்தி, ராம்சன் வினோத் சாகர், டவுட் செந்தில், பேபி ஜானு பிரகாஷ்
தயாரிப்பு: பெஞ்ச் மார்க் பிலிம்ஸ் ஜோதி முருகன், பாக்யலட்சுமி
இசை: சாம் சி.எஸ்,
ஒளிப்பதிவு: விவேக் ஆனந்தம் சந்தோஷ்
இயக்கம்: சீனுவாசன்
பி ஆர் ஒ : சுரேஷ் சந்திரா
ஐ டி ஐயில் படித்த விதார்த் படிப்பு முடித் தாலும் போலீஸ் ஆகவேண்டும் என்ற ஆசையில் வேறு வேலைக்கு செல்லாமல் இருக்கிறார். அவரது தந்தை மாரிமுத்து குப்பை வண்டி ஓட்டுனராக இருக்கிறார். மகனை வேலைக்கு செல்லும்படி கூறும் போது கோபம் அடையும் விதார்த் ”வேலைக்குபோய் முதல் மாதம் சம்பளம் வாங்கிய பிறகுதான் உங்களிடம் நேரில் பேசுவேன்” என்று சபதம் செய்கிறார். வேலையும் கிடைக்கிறது. தந்தையிடம் பேசுவதற்காக போனில் அழைக்கும் போது அவர் விபத்தில் சிக்கிய விவரம் தெரிகிறது. அதிர்ச்சி அடையும் விதார்த் பலத்த காயம் அடைந்த தந்தையை மருத்துவமனையில் சேர்க்கிறார். முன்னதாக தன் கனவில் தந்தையை யாரோ காரில் மோதி கொல்ல முயன்றது போன்ற காட்சி விதார்த்துக்கு தெரிகிறது. கனவில் காண்பது அடிக்கடி நிஜமாவதால் தன் கனவில் வந்ததுபோல் தந்தையை கொல்ல முயன்றது யார் என்று தேடுதல் வேட்டை யில் இறங்குகிறார் விதார்த். அடுத்து நடந்தது என்ன என்பதற்கு படம் விறுவிறுப்பாக பதில் சொல்கிறது.
கனவில் வரும் காட்சிகள் வாழ்க்கையில் நிஜமாக நடந்துவிடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விதார்த். மாறுபட்ட வேடம் என்பதால் நடிக்க அதிக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நன்றாகவே பயன் படுத்திக்கொண்டிருக்கிறார்.
தந்தை மீது கோபத்தை வெளிப்படுத்தி அவரிடம் செல்போன் வாட்ஸ் அப் மூலம் பேசி கடுப்பாக்கும் விதார்த், பின்னர் தந்தை காயம் அடைந்ததும் அவர் மீது தான் வைத்திருந்த அன்பை கொட்டித் தீர்ப்பது உருக்கம்.
கனவின் தொடர்ச்சியை காண்பதற்காக டைம்லூப் பாணியில் செய்த வேலையை யே விதார்த் செய்வதும் ஒரு கட்டத்தில் கனவின் தொடர்ச்சி வந்து அதில் தனது தந்தையை கார் ஏற்றி கொல்ல முயன்றது யார் என்பது தெரிந்ததும் அதிர்ச்சி விதார்த் துக்கு மட்டுமல்ல ஆடியன்ஸுக்கும்தான். சரியான திருப்புமுனை காட்சியாக அமைத்த இயக்குனருக்கு பாராட்டு சொல்லலாம்.
ஹீரோயினாக தான்யா பாலகிருஷ்ணன் நடித்திருக்கிறார். 2ம் பாதிக்குமேல்தான் இவரது பாத்திரம் வருகிறது ஆனால் முக்கியமான பாத்திரமாக மாறிவிடுகிறது. அப்பாவிபோலவும் வில்லிபோலவும் நடித்து மிரட்டி இருக்கிறார்.
பெஞ்ச் மார்க் பிலிம்ஸ் ஜோதி முருகன், பாக்யலட்சுமி தயாரிக்க எழுதி இயக்கி இருக்கிறார் சீனுவாசன். விஜய் ஆண்டனி நடித்த அண்ணாத்துரை படத்தை இயக்கிய சீனுவாசன் வித்தியாசமான ஜானரில் கார்பன் படத்தை இயக்கி இருக்கிறார். சொல்ல வந்த கதையில் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் சஸ்பென்ஸ் கெடாமல் சொல்லியிருக்கிறார்.
காட்சிகளில் வித்தியாசம் காட்டி மனதில் ஓவியமாக பதிய வைத்திருக்கிறார்
ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்தம் சந்தோஷ் .
சாம் சி.எஸ்.இசையும் படத்துக்கு கைகொடுத்திருக்கிறது.
கார்பன் – ஆச்சர்யமூட்டும் சஸ்பென்ஸ் த்ரில்லர்.

