படம்: கிங்ஸ்டன்
நடிப்பு: ஜிவி பிரகாஷ் குமார், திவ்யபாரதி, சேத்தன் , அழகம்பெருமாள், குமாரவேல், சாபுமன், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், பிரவீன் பயர் கார்த்திக்
தயாரிப்பு: ஜிவி பிரகாஷ் குமார், உமேஷ் கே ஆர், பன்சால் பவானி ஸ்ரீ
இசை: ஜிவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: கோகுல் பெனாய்
இயக்கம்: கமல் பிரகாஷ்
பிஆர்ஓ: யுவராஜ்
கடல் சார்ந்த மீனவர்கள் வாழும் பகுதியில் சில பேய் கதைகள் உலவுகின்றன. கடலுக்குள் மீன் பிடிக்க சென்றால் மீண்டும் யாரும் திரும்பி வருவதில்லை அங்கேயே இறந்து போகிறார்கள் . அவர்களை பேய் கொன்று விடுகிறது என்ற பேச்சு அப்பகுதியில் உள்ளவர்களை பயமுறுத்தி வைக்கிறது. . இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல பயந்து அப்பகுதிலேயே வேறு வேலை செய்கிறார்கள். இந்நிலையில் மீனவ பகுதியில் வாழும் இளைஞர் கிங்ஸ்டன் (ஜிவி.பிரகாஷ்) கடலில் பேய் இருக்கிறது என்பதெல்லாம் கட்டுக்கதை. யாரும் நம்ப வேண்டாம். அதை நிரூபிக்க நானே கடலுக்குள் சென்று மீன் பிடித்து திரும்புகிறேன் என்று கூறி தன்னுடன் சிலரை அழைத்துச் செல்கிறார். நடுக்கடலுக்குள் சென்ற பிறகுதான் அதிர்ச்சி காத்திருக்கிறது. கடல் முழுவதுமாக மனித எலும்பு கூடுகளால் நிரம்பிக் கிடக்கிறது அதை பார்த்து கிங்ஸ்ட னும் உடன் வந்தவர்களும் நிலைகுலுந்து போகிறார்கள். நேரம் செல்லச் செல்ல கடலுக்குள் பேயாட்டம் தொடங்கி விடுகிறது. நேரடியாக படகிற்கு வந்து கிங்ஸ்டன் கூட்டத்தை தாக்குகிறது. அந்த தாக்குதலிலிருந்து அவர்கள் தப்பினார்களா அல்லது கடல் பேய்க்கு பலியானார்களா ?என்பதற்கு பதில் அளிக்கிறது கிங்ஸ்டன் திரைப்படம்.
இது முழுக்க ஒரு கடல் பேண்டஸி ஹாரர் ஃபிலிம்..
ஜிவி பிரகாஷ் மாறுபட்ட பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடல் பேயை கொன்றுவிட்டு திரும்புகிறேன் என்று கடலுக்குள் ஜிவி பிரகாஷ் புறப்பட்டு சென்றதும் ரசிகர்களையும் தன்னுடனேயே கடலுக்குள் அழைத்துச் சென்று விடுகிறார்.
சினிமா அரங்கிற்குள் கடல் புகுந்தது போல் உணர்வை ஏற்படுத்தும் கொந்தளிக்கும் கடல் அலைகள், ஆர்ப்பரிக்கும் பேய்கள், சுழன்றடிக்கும் சூறாவளி என காட்சிகள் பிரமிக்க வைக்கிறது.
கடலில் மிதக்கும் ஆயிரக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் நடுவே ஜி வி பிரகாஷ் படகு சிக்கிக் கொள்வதும் அங்கு மிதககும் எலும்புக் கூடுகளை கண்டு உடன் வருபவர்கள் அதிர்ச்சியில் உறைவது திணறடிப்பதுடன் கோரை பற்களுடன் பேய்கள் ஜிவி பிரகாஷ் மற்றும் உடன் இருப்பவர்களை தாக்குவது படபடப்பு.
கடலுக்குள் பேய் எப்படி வந்தது, அதற்கு காரணம் யார் ? கடலில் இருக்கும் பேய்கள் அழிக்கப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் திகில் பதில் அளிக்கிறது.
திவ்யபாரதி ஹீரோயின். சேத்தன், அழகன் பெருமாள் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் இரண்டாம் பாதி முழுவதுமே கடலுக்குள் படமாக்கப்பட்டிருப்பதுடன் வி எப் எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரம்.
கோகுல் பெனாய் ஒளிப்பதிவு பாராட்டத்தக்கது. படம் 50% என்றால் படத்திற்கான இசை 50 சதவீதம் என்ற பங்காற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்..
மாறுபட்ட கடல் ஹாரர் பேண்டஸி படம் தந்திருக்கிறார் இயக்குனர் கமல் பிரகாஷ்.
கிங்ஸ்டன் – கடல் நடுவே ஒரு பேயாட்டம்.