Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஆளைப் பார்த்து மழையும் பெய்யுமா? தோலைப் பார்த்துக் காற்று வீசுமா?

ஆளைப் பார்த்து மழையும் பெய்யுமா?
தோலைப் பார்த்துக் காற்று வீசுமா?

நிற வெறி எதிராக வைரமுத்து

அமெரிக்கா போலீஸ் அதிகாரி நிற வெறிக்கு கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் பலியானார். காலில் கழுத்தில் மிதித்து கொலை செய்தபோது .அந்த கருப்பினத்தவர்  கடைசியாக  ‘என்னால் சுவாசிக்க முடிய வில்லை’ என கண்ணீர் விட்டார். அவர் உயிரும் பிரிந்தது.
உலகம் முழுவதும் இது நிற வெறிக்கு பரவியிருக்கிறது. கவிப் பேரரசு வைரமுத்து காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை’ என்ற பாடல் எழுதியிருக்கிறார்.

ரமேஷ் தமிழ்மணி இசை அமைத்திருக்கிறார்.
இப்பாடல் வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில்  உலகம் முழுவதும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
தமிழ் கவின் வைரமுத்துவின் அந்த பாடல் :
காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்
மூச்சுவிட முடியவில்லை
என் காற்றின் கழுத்தில் – யார்
கால்வைத்து அழுத்துவது?
சுவாசக் குழாயில் – யார்
சுவர் ஒன்றை  எழுப்பியது?
காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்
மூச்சுவிட முடியவில்லை
*
எத்தனை காலம் விலங்குகள் இறுகும்?
எத்தனை காலம் நுரையீரல் நொறுங்கும்?
ஆளைப் பார்த்து மழையும் பெய்யுமா?
தோலைப் பார்த்துக் காற்று வீசுமா?
காக்கையும்  உயிரினம்
கருமையும் ஒரு நிறம்
எல்லா மனிதரும் ஒரே தரம்
எண்ணிப்பாரு ஒரு தரம்
மாளிகை நிறத்தை மாற்றுங்கள் – ஒரு
பாதியில் கறுப்பைத் தீட்டுங்கள்
நீங்கள் பகல் நாங்கள்  இரவு
இரண்டும்  இல்லையேல் காலமே  இல்லை
காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை – என்னால்
மூச்சுவிட முடியவில்லை
இவ்வாறு வைரமுத்து பாடலில் குறிப்பிட்டிருகிறார். இந்த பாடல் நெட்டில் வைரலாகி இருக்கிறது.

Related posts

Big deals for “Anti-Indian” OTT & Satellite Rights

Jai Chandran

Teddy Record Breaking Views

Jai Chandran

*சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் “ராஜா கிளி”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend