தமிழ் திரையுலகின் திசையை தீர்மானித்த தயாரிப்பளர், கதாசிரியர் பஞ்சு அருணா சலம் அவர்களின் சாதனை களை பாராட்டி மகிழ பி.ஏ ஆட்ர்ஸ் புரடக்ஷன்ஸ் மற்றும் ப்ளாக்ஷீப் உடன் ஒட்டு மொத்த திரையுலகமும் இணைந்து நடத்தும் 80 ம் ஆண்டு விழா கொண்டாடத்திற்கான அறிமுக நிகழ்வு சென்னையில் உள்ள தி பார்க் ஓட்டலில் ஜூன் 11ம் தேதி நடந்தது.
இந்நிகழ்வானது பத்திரிகை யாளர் சந்திப்பாக மட்டுமல் லாமல் வரலாற்றில் முதன் முறையாக பத்திரிக்கையாளர் களை கவுரவிக்கும் விதமாக இருக்கவேண்டும் என்பதற்காக பிரஸ் கிரீட் என்ற தலைப்பில் பிளாக்ஷீப் நிறுவனத்தால் நடத்தப்பட்டது.
டிஜிட்டல் தளத்தில் இளம் சாதனையாளர்களை தேடித் தேடி அங்கீகரிக்கும் டிஜிட்டல் அவார்ட்ஸில் தொடங்கி யுவன்சங்கர் ராஜாவின் திரையுலக 25 ம் ஆண்டு நிகழ்வை கொண்டாடும் யுவன்25 வரை திறமை யாளர்களை அங்கீகரிப்பதை தொடர்ந்து இடையறாது செய்து வருகிறது. ப்ளாக்ஷூப் இளைஞர் பட்டாளம். அடுத்த கட்டமாக திரையுலக ஜாம்பவான் பஞ்சு அருணா சலம் அவர்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றுசேர்க்கும் விதமாகவும் தமிழ் திரையுலகின் பன்முகத் திறன் வாய்ந்த பல்வேறு சாதனையாளர்களை இன்றைய இளைஞர்களுக்கு கொண்டுசேர்க்கும் முதல் படியாகவும் இவ்விழாவினை முன்னெடுத்துள்ளது பிளாக் ஷீப் நிறுவனம் . இதை பி ஏஆர்ட்ஸ் புரட்க்ஷன்ஸ் சுப்பு பஞ்சு இணைந்து நடத்த விழையும் தருவாயில் பிற சங்க நிர்வாகிகளும் தாமாக முன்வந்து நிகழ்ச்சிக்காக ஒத்துழைத்தனர்.
எழுத்தாளர் இயக்குனர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டு ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித் தவர் பஞ்சு அருணாச்சலம். கவியரசு கண்ணதாசனிடம் பல ஆண்டுகள் அவரது பிரதான சிஷ்யராக இருந்து பணியாற் றியவர். இவர எழுதிய நான் மனிதன்தான் என்ற பாடல் 1960ல் வெளியானது. அன்னக்கிளி படத்தின் மூலம் இசைஞானி இளையராஜாவை தமிழ்திரையுகத்திற்கு அறிமுகப்படுத்தியவர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றவர். இவரது உழைப் பையும் சாதனையையும் பாராட்டும் விதமாக வரும் ஆகஸ்ட் மாதம் பஞ்சு அருணாச் சலம் 80 என்ற விழா நடக்க உள்ளது. அதற்கான லோகோ மற்றும் அறிவிப்பு நடந்தது.
இதில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, டி.ஜி.தியகராஜன், கங்கை அமரன், சித்ரா லட்சுமணன், காட்ரகரட்ட பிரசாத், ரவி கொட்டாரக்கரா, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பூச்சி முருகன், திரை அரங்கு உரிமையாளர் சங்க தலைவர் பன்னீர்செல்வம் , ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள். பஞ்சு
அருணாசலத்தின் வாழ்க்கை யை ஆவணப்படமாக இயக்குனர் தனஞ்ஜெயன்,லலிதா ஜெயானந்த், உமா மகேஸ்வரி சத்யகுமாரும் , பி ஏ ஆர்ட்ஸ் சுப்புபஞ்சு கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர்கள் கலைப்பூங்கா ராவணன், தேவி மணி, க. ஜெயச்சந்திரன், தேவராஜ் ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக் கப்பட்டனர்.
நிகழ்ச்சியை பிளாக்ஷீப் விக்னேஷ் தொகுத்து வழங்கினார்.
அனைவரையும் பி ஆர்ஒ சுரேஷ் சந்திரா வரவேற்றார். முடிவில் டி.சிவா நன்றி கூறினார்.
