விரைவில் விஷால் ‘சக்ரா’ டீஸர்
விஷாலின் நடிக்கும் ‘சக்ரா’ படத்தை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது. இயக்குனர் எழிலிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எம்.எஸ். ஆனந்தன் டைரக்ட் செய்கிறார்.
ஆன்லைன் வர்த்தக மோசடிகள் தோலுரிக்கும் படமாக உருவாகி வருகிறது. இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். மேலும் ரோபோ ஷங்கர், கே.ஆர். விஜயா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார். ஒளிப்பதிவு பால சுப்பிரமணியம். படத்தொகுப்பு சமீர் முகமது. கலை எஸ்.கண்ணன். சண்டைக் காட்சி அனல் அரசு.பிஆர் ஒ ஜான்சன்.
இதன் பெரும்பகுதி படப் பிடிப்பு முடிந்துள்ளது ஊரடங்கால் படப் பிடிப்பு தடைபட்டது. அனுமதி கிடைத்ததும் படப்பிடிப்பு தொடரும் இதற்கிடையில் தற்போது டீஸர் பணி நடக்கிறது.
சென்னை மற்றும் கோவை பகுதிகளில் ஷுட்டிங்