Trending Cinemas Now
விமர்சனம்

காவல் துறை உங்கள் நண்பன் (பட விமர்சனம்)

படம் காவல் துறை உங்கள் நண்பன்

நடிப்பு: சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, ஆர்.ஜே.முன்னா

தயாரிப்பு: ராஜபாண்டியன், பாஸ்கரன், சுரேஷ் ரவி

வெளியீடு: ஜி.தனஞ்செயன்

இசை ஆதித்யா மற்றும் சூர்யா

ஒளிப்பதிவு கே.எஸ்.விஷ்ணுஸ்ரீ

டைரக்‌ஷன்; ஆர் டி எம்

ஆர்டரின்பேரில் உணவு எடுத்துச் செல்லும் சுரேஷ் ரவி மனைவியுடன் பைக்கில் செல்லும்போது போலீஸ்  மடக்குகிறது. இன்ஸ்பெக்டர் மைம்கோபி, சுரேஷை குடித்துவிட்டு வண்டி ஒட்டுகிறாயா என்று தவறாக பேசுகிறார். அதைகேட்டு கோபத்தில் சுரேஷ் அவரை அதிரடியாக ஒரு கேள்வி கேட்கிறார். அதைக்கேட்டு கோபம் அடையும் கோபி, சுரேஷை கன்னத்தில் அறைந்து தூக்கி காவல் வண்டியில் போட்டுகொண்டு ஸ்டேஷனுக்கு புறப்படுகிறார். அப்போது முதள் சுரேஷுக்கு ஏழரை ஆரம்பித்துவிடுகிறது. சுரேஷை பார்க்கும்போதெல்லாம் மைகோபி தாக்குகிறார். கணவன் போலீசில் சிக்கி இருப்பதால் அவரை அழைத்துவர போகும் மனைவி ரவீனாவை போலீஸார் மிரட்டி அனுப்புகிறார்கள். வக்கீல் ஒருவர் மூலமாக சுரேஷை மீட்கிறார் மனைவி. மீண்டும் காலை சுற்றிய பாம்பு போல் போலீஸ் சுரேஷை பின்தொடர்கிறது. பாஸ்போர்ட்டுக்காக நோ அப்ஜெக்‌ஷன் சான்று வாங்க மீண்டும் மைம் கோபியிடம் வருகிறார் சுரேஷ். இருவரும் சந்தித்தாலே கீறியும் பாம்புமாக மாறிவிடுகிறது சீன். அடுத்து சில நிமிடங்கள் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சிகள் திகிலை பரவவிடுகிறது.

 

காவல் துறை உங்கள் நண்பன் என்ற வசனம்  கேட்பதற்கு ஆறுதலாக இருக்கிறது ஆனால் நிஞத்தில் காவல் துறை மக்களுக்கு என்னவாக இருக்கிறது என்பதை அக்குவேறு ஆணிவேறாக படத்தில் புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள். சுரேஷை போலீஸ் மடக்கி விசாரிக்கும்போது மெல்ல மெல்ல மைம் கோபிக்கும். சுரேஷுக்கும் வார்த்தைகள் முற்றும்போதே ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று பதற்றம் பரவுகிறது. ஹீரோயிசமாக சுரேஷ் பேச கோபம் அடையும் மைம்கோபி அவரை அடித்து இழுத்து செல்லும்போது காட்சி இந்த ஒரு கருவியேயே சுழலப்போகிறது என்பதை கணிக்க முடியவில்லை.

சுரேஷை கண்மூடித்தனமாக தாக்கும் மைம்கோபி ஒரு வெறிபிடித்த வில்லனாக மாறி இருக்கிறார். நாள் கணக்கில் அலையவிட்டு கடைசியில் மோட்டார் சைக்கிளை  திரும்ப கொடுப்பதுபோல் கொடுத்து மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறியதுபோல் மைம்கோபி  சுரேஷை பிடித்து தாக்குவது கதி கலங்குகிறது.

பாஸ்போர்ட்டெல்லாம் வேணாம் நமக்கு இந்த வாழ்கையை போதும் என்று மனைவி ரவீனா கூறுவதை கேட்காமல் மீண்டும் மைம் கோபியை சந்தித்து நோ அப்ஜெக்ஷன் சான்று கேட்பதும் அதற்கு கோபி மனித உரிமை ஆணயத்துக்கு   சுரேஷை கடிதம் எழுதசொல்வதும் அடுத்து ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதற்கான சூழல் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

சுரேஷ் நன்கு நடித்திருக்கிறார் என்பதைவிட நன்கு அடி வாங்கி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அத்தனை அடியில் ஒரு அடி நிஜமானது என்றாலும் முதுகு எலும்பு முறிந்து போயிருக்கும்..

இயக்குனர் ஆர் டி எம் கதை ஒரு ஆர் டி எக்ஸ் பாம் போல் வெடிக்க வைத்திருக்கிறார். கேமிரா. இசை காட்சியை ஒவர் டேக் செய்யாமல் காட்சியோடு இணைந்து பயணிப்பது பலம்.

காவல் துறை உங்கள் நண்பன் – பேர கேட்டாலே திகில் பரவும் கிளைமாக்ஸ்.

 

Related posts

வாய்தா (பட விமர்சனம்)

Jai Chandran

லெவன் (பட விமர்சனம்)

Jai Chandran

ஆறாவது நிலம் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend