படம்: என் பெயர் ஆனந்தன்
நடிப்பு: சந்தோஷ், அதுல்யா ரவி, அரவிந்த் ராஜகோபால், தீபக் பரமேஷ், அருண் ஆத்மா
தயாரிப்பு: ஸ்ரீதர் வெங்கடேசன், கனகா வெங்கடேசன், கோபி கிருஷ்ணப்பா
இசை: ஜோஷ் பிரங்க்ளின்
ஒளிப்பதிவு: மனோ ராஜா
இயக்கம்: ஸ்ரீதர் வெங்கடேசன்
குறும்படங்களை இயக்கிய சந்தோஷ் பிரதாபுக்கு பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைக்கிறது. 50 பட்ஜெட்டில் படம் எடுக்க விருப்பதாக கூறும் தயாரிப்பா ளர் பின்னர் சந்தோஷிடம் இந்த படத்தை வட்டிக்கு வாங்கிதான் எடுக்கிறேன். ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்கிறார். சந்தோஷும் கண்டிப்பாக வெற்றிபடமாக இருக்கும் என்று சொல்கிறார். ஷூட்டிங் கிற்கு ரெடி செய்துவிட்டு காரில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு புறப்படுகிறார். காரில் மறைந் திருக்கும் முகமூடி நபர் சந்தோஷை தாக்கி மயக்கம் அடையச் செய்து கடத்து கிறார். கண்விழித்து பார்த்தால் தனி அறையில் ஒரு சேரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார். அப்போது இன்னொரு நபரும் அங்கு முகமூடியுடன் வருகி றார். நீ எடுத்த குறும்படத்தில் டவுட் அதை கிளியர் செய்து விட்டு போ என்கிறார். கடுப்பான சந்தோஷ், ’நீ என்ன லூசா இன்றைக்கு எனக்கு முதல்நாள் ஷூட்டிங் தொடங்க உள்ளேன், என்னை இங்கு கடத்தி வந்திருக்கிறே..’ என்று கடுப்பாகிறார். நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொன்னால் சீக்கிரம் போக லாம். அங்கு பார் ரொம்பவும் பிடிவாதம் பிடித்தவன தூக்கில் தொங்குகிறான் என்று காட்டு கிறார். அதைக்கண்டு அச்சம் அடைக்கிறாஎ சந்தோஷ். இதற்கிடையில் சந்தோஷை காணவில்லை என்று படக் குழு தேட ஆரம்பிக்கிறது. சந்தோஷை கடத்தி வந்தவர் கள் அவரது குறும்படத்தை அவருக்கே போட்டுக்காட்டி விளக்கம் கேட்கின்றனர். கூத்து கலைகள் பாரம்பரிய கலைகள் பற்றி படம் எடுக்கமாட்டீர் களா என்கின்றனர். ஆத்திரம் அடையும் சந்தோஷ் கூத்து கலைஞர்களை திட்டுகிறார். இதில் கோபம் அடைந்த கடத்தல் பேர் விழிகள் சந்தோஷை கன்னத்தில் அறைந்து தப்பான இடத்துல தப்பான வார்த்தை பேசிட்டே என்று சொல்லி தாங்களே கூத்து கலைஞர்கள் என்று அதிர்சி தருகின்றனர். இறுதி யில் நடந்தது என்ன என்ப தற்கு உருக்கமுடன் விடை செல்கிறது கிளைமாக்ஸ்.
என் பெயர் அனந்தன் என்ற டைட்டிலை கேட்டவுடன் ஏதோ ஆக்ஷன் கதை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணத்துடன் படத்தை பார்த்தால் கதைக்களமே முற்றிலும் வேறுமாதிரி செல் கிறது. பிறகு சினிமா ஹூட்டிங்கை காட்டி நேரத்தை கடத்தப்போகிறார் கள் என்று எண்ண வைத்து திடீரென்று எங்கோ ஒரு அறைக்குள் கதையின் கருவை அடைத்துள்ளார் இயக்குனர். ’42 சர்வதேச விருதுகளை இப்படம் வென்றுள்ளது.
சந்தோஷை கடத்திய நபர்கள் அவரை தனிஅறையில் அடைத்து வைத்திருப்பதும் அந்த அறை முழுவதும் பழங் கால சினிமா பிரபலங் கள் தொடங்கி ஹாலிவுட் ஜோக்கர் வரையிலான போஸ்டர் புகைப்படங்கள் என அறையே சினிமா மயமாக இருக்கிறது. சிவாஜி படத்தை திரையிட்டு காட்டி நடிகர் திலகம் தன்னுடைய முகத்தில் எத்தனை நடிப்பை வெளிப் படுத்தினார். அதுபோல் நீங்கள் ஏன் படம் எடுக்க முடியவில்லை என்று முகமூடி நபர் சந்தோஷை கேட்கும் போது, நியாமாகத்தானே கேட்கிறார் என்று தோன்று கிறது. அங்கிருக்கும் டிவியில் நடிகவேல் எம் ஆர் ராதாவின் ரத்தக் கண்ணீர் படத்தை ஓடவிட்டு அவ்வப் போது அதன் வசனங்களையும் காட்டு வது காட்சிக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது.
சினிமா என்றால் கற்பனை இருக்கும், கமர்ஷியல் இருக் கும் அப்போதுதான் தயாரிப் பாளர்கள் வாய்ப்பு தருவார்கள் என்று சந்தோஷ் கூற சினிமா ஒரு கலை அது கலைகளின் தொகுப்பாகத்தான் இருக்க வேண்டும் என்று முகமூடி நபர் சொல்வது சபாஷ் போட வைக்கிறது.
இது வழக்கமான சினிமா அல்ல என்பதை படம் தொடங்கி சிறிது நேரத்தி லேயே புரியவைத்து விடுகி றார்கள். அந்த குண்டு நடிகர் எம்ஜிஆர், சிவாஜி, விஜயாகாந்த், கமல், ரஜினி போல் வேஷம் போட்டுக் கொண்டு பின்னணியில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஏதோ தமாஷ் செய்கி றார் என்று எண்ண வைத்து பிறகு அவர் கூத்து கலைஞர் வேடம் போட்டு கூத்தாடும் போது அசர வைக்கிறார்.
கடைசிவரை முகத்தை காட்டாமல் இறந்து போகும் அந்த நடிகர், முகமூடி அணிந் திருந்தாலும் பேசும் வார்த்தை களுக்கு சரியான உணர்வுகளை வெளிப்படுத்துவதை உணர முடிகிறது. முகம் காட்டாமல் முகமூடி அணிந்து நடித்திருப் பவர் அருண் ஆத்மா.
ஹீரோயின் அதுல்யா ரவிக்கு அவ்வளவு வேலை இல்லை. சில காட்சிகளில் பெயருக்கு வந்து செல்வதுபோல் வந்து சென்றிருக்கிறார்.
ஹீரோ சந்தோஷின் உதவி இயக்குனராக வருபவரும் அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு அசாதராண வேலை செய்துவிடுகிறார். இனி இவரை அடிக்கடி திரை யில் பார்க்கலாம்,. கடைசிவரை சேரிலேயே கட்டிபோடப்பட்டிருக்கும் சந்தோஷ் பிரதாப்பை கூத்து கலைஞர்களின் இறுதி முடிவை தடுக்க போராடும் போது ஸ்கோர் செய்கிறார்.
கமர்ஷியல் என்ற பெயரில் சினிமாவை கெடுக்காமல் மக்களுக்கு அர்த்தமுள்ள படங்களை தர இயக்குனர்கள் முன்வரவேண்டும் என்பதை நெத்தியடியாக சொல்லி இருக் கிறார் ஸ்ரீதர் வெங்கடேசன். சமீபகால படங்களில் கேட்க முடியாத பழங்கால படங் களின் இசை பின்னணி காதில் ரீங்காரமிடும்போது யார் இந்த இசை அமைப்பாளர் என்று கேட்க வைக்கிறார் ஜோஸ் பிராங்க்ளின். கதைக்கேற்ற ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மனோ ராஜா.
என் பெயர் ஆனந்தன் வித்தியாசம்.