Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கட்சிக்காரன்’ (பட விமர்சனம்)

படம்: கட்சிக்காரன்’

நடிப்பு: விஜித் சரவணன், ஸ்வேதா பாரதி, அப்புக்குட்டி , சிவ சேனாதிபதி, ஏ.ஆர். தெனாலி, விஜய் கெளதம், சி.என்.பிரபா கரன்,வின்சென்ட்ராய், குமர வடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி,நந்தகுமார், சக்திவேல் முருகன், நடிகர் நாசரின் தம்பி ஜவகர்

தயாரிப்பு: சரவணன் செல்வராஜ்

இசை: ரோஷன் ஜோசப், சி.எம். மகேந்திரா

ஒளிப்பதிவு : மதன் குமார்

இயக்கம்: ப.ஐயப்பன்

பி ஆர் ஒ: சக்தி சரவணன்

கட்சி தலைவர் மீது விசுவாசம் காட்டி கடுமையாக உழைத்து வாழ்க்கையை இழந்த தொண்டன் சரவணன் (விஜித் சரவணன்) , தன்னை  வஞ்சித்த  தலைவரை எதிர்த்து கேள்வி கேட்டு இழப்பீடு கேட்கிறான். அதன் பிறகு நடப்பதை பரபரப்பாகவும், ருசிகரமாகவும், சென்டிமென்ட்டா கவும் சொல்கிறது கிளைமாக்ஸ் .

குடும்பத்தை பற்றி கவலைப் படாமல் கட்சி கட்சி என்று காலத்தை கழிக்கும் விஜித் போஸ்டர் ஒட்டுவது , கொடி கட்டுவது, தோரணம் கட்டுவது, கோஷம் போடுவது , கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது , விழாக்கள் ஏற்பாடு செய்வது என நிஜ கட்சி  தொண்ட னாகவே மாறியிருக்கிறார்.
உழைபுக்கு ஏற்ற கூலியாக கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்போது மகிழ்வதும் பின்னர் அந்த சீட் மாற்று கட்சியிலிருந்து வந்தவருக்கு தரப்பட்டதும் மனமுடைந்து போவதுமாக உணர்வுபூர்வமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கட்சி செலவுக்குப் பணம் இல்லாத போது தன் மனைவியின் தாலியை அடகு வைக்க துணிவது நெகிழ்ச்சி.

தனது விசுவாசத்துக்கு கிடைத்த ஏமாற்றத்தை எண்ணி சோர்ந்து விடாமல் தன்னைப் போல ஏமாற்றப்பட்டவர்களை ஒன்று திரட்டிக் கொண்டு போராடுவது புது அரசியல்.

கண் முன்னே ஊருக்கு ஊர் தெருவில் கட்சிக்காகச் சுற்றித் திரியும் அப்பாவித் தொண்டர் களை சரவணன் பாத்திரம் கண்முன் நிறுத்துகிறது.

மனைவி அஞ்சலியாக நடித்தி ருக்கும் ஸ்வேதா டாரதி நடுத்தர வர்க்கத்து வாழ்க்கைப் போராட்டத் தை உணர்ந்து நடித்திருக்கும் பாங்கு வேடத்தின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துகிறது.

கட்சி தலைவராக வரும் சிவ சேனாதிபதி இயல்பான நடிப்பில் கவர உதவியாளராக வரும் அப்புகுட்டி கெஸ்ட் ரோல் என்றாலும் உயிர்ப்போடு நடித் துள்ளார்.

ஹீரோ நண்பராக வரும் தெனாலி தான் செய்யும் சேட்டைகள் மூலம் சிரிப்பூட்டுகிறார்.

கட்சித் தொண்டரின் விசுவாசம் எப்படியிருக்கிறது ஆனால் தலைமை எப்படியிருக்கிறது என்பதை இயக்குனர் ப.ஐயப்பன் துணிச்சலாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

படத்தில் இடம்பெறும் ‘செங்குறிச்சி சின்ன பொண்ணு சிரிச்சாளே’ பாடல்கள் கேட்கும்படி உள்ளது. கட்சிக்காரன் கட்சிக்காரன் பாடல் தொண்டர களுக்கான பாடல் .

துணிச்சலான வசனங்கள் என்றாலும் செயல்பாட்டில் அதை உணர்த்தாது ஏமாற்றம்.

கட்சிக்காரன் – இது தொண்டர்கள் கையில் எடுக்க வேண்டிய சவுக்கு .

Related posts

சமந்தா நடிக்கும் ‘யசோதா’ ஆகஸ்ட் ரிலீஸ்

Jai Chandran

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க கோரிக்கை முதல்வர் அனுமதியுடன் பரிசீலனை: அமைச்சர் உறுதி

Jai Chandran

பிளாஸ்டிக்  ஒழிப்பை ஊக்கிவிக்கும் விஜய் மக்கள் இயக்கம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend