Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கலர்ஸ் தமிழில் நகைச்சுவை படம் பிஸ்தா

உலக தொலைக்காட்சியில் முதல் முறையாகbவேடிக்கை கலந்த நகைச்சுவை திரைப்படமான பிஸ்தா திரைப்படத்தை ஒளிபரப்பு செய்யும் கலர்ஸ் தமிழ்
இந்த ஞாயிறு, நவம்பர் 18 ஆம் தேதி மதியம் 2:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்.

வயாகாம்18 நிறுவனத்தின் தமிழ் என்டர்டெயின்மென்ட் சேனலான கலர்ஸ் தமிழ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் வளையல் மேளாவுடன் இணைந்து, திருமணங்கள், கேளிக்கைகள் மற்றும் குழப்பங்கள் நிறைந்த பிஸ்தா திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி பிரீமியரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த ஞாயிறு, நவம்பர் 18 ஆம் தேதி மதியம் 2:00 மணிக்கு கண்டு மகிழ தயாராகுங்கள்.

திருமணங்களை நிறுத்துவதை முழு நேர வேலையாக செய்யும் கதாநாயகன் சரவணனை சுற்றி கதை முழுதும் நகர்கிறது. அதனால் கடைசியில் அவர் தனது சொந்த திருமணத்தில் மணமகள் இல்லாமல் இருக்கும்போது என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் இறுதி திருப்பமாகும். நவம்பர் 18, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணிக்கு காதல் மற்றும் நகைச் சுவை கலந்த பயணத்தைக் காண, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை பாருங்கள்.
எம்.ரமேஷ் பாரதி இயக்கிய இத்திரைப்படத்தில், நடிகர் ஷிரிஷ் சரவணன், நடிகை மிருதுளா முரளி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், நடிகர் யோகி பாபு, நடிகர் சதீஷ், நடிகர் சுவாமிநாதன் மற்றும் நடிகர் பாவா லட்சுமணன் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர். “அழகுல ராசாத்தி” பாடலைப் பாடியுள்ள யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இசையமைப்பாளர் தரனின் இசையமைப்பு படத்தின் சாராம்சத்தை அதிகரிக்கும்.

கும்பகோணத்தில் உள்ள கிராமப்புற சூழலை அடிப்படை  யாகக் கொண்ட இத்திரைப்படம், ஒரு மகிழ்ச்சியான கிராமவாசி  யான சரவணன் (ஷிரிஷ் சரவணன்), அவர் தனது நண்பர்  களான சதீஷ் (சதீஷ்) மற்றும் மார்க் பாபு (யோகி பாபு) ஆகியோருடன் சேர்ந்து, மணமகள் மற்றும் மணமகனின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் பெரும்பாலான திருமணங்களில் சலசலப்பை உருவாக்கி, “திருமணத்தை நிறுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.தனது நாடகங்கள் மூலம் கிராமங்களுக்கு கல்வி கற்பிக்க பாடுபடும் ஒரு நாடகக் கலைஞரான செல்வி (மிருதுளா முரளி) மீது தீரா காதலில் விழுகி றார் சரவணன். ஒரு கட்டத்தில் ​​அவர் தனது தொழிலுக்காக பிரச்சினையில் சிக்கி, சிறையில் அடைக்கப்படுகிறார், அப்போது அவர் ஒரு சூழ்நிலையில் தனது வாழ்க்கையை ஒரு திருமண நிறுத்துபவராகவோ அல்லது அவர் வாழ்க்கையின் காதலையோ ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும், சரவணன் எதைத் தேர்வு செய்கிறார் என்பது கதையின் மீதி சுவாரஸ்யமான இறுதியாகும்.

இத்திரைப்படத்தின் தொலைக் காட்சி பிரீமியர் குறித்து இயக்குநர் எம். ரமேஷ் பாரதி பேசுகையில், “ பிஸ்தா திரைப்படம் திருமணத்தை நிறுத்துபவர்களைக் காணக்கூடிய கருத்துடன் கூடிய தனித்துவமான படம் ஆகும். பெரும்பாலான திரைப்படங்கள் பொதுவாக திருமண திட்டமிடுபவர்கள் மற்றும் தனித்துவமான திருமணங்களைத் திட்டமிடும் நபர்களைக் கொண்டுவருகின்றன, ஆனால் ஒரு வேடிக்கையான அம்சத்தை எதிர்பாரா திருப்பத்துடன் உருவாக்குவதே எனது யோசனை  யாக இருந்தது, எனவே நாங்கள் கருத்தை மாற்றியமைத்தோம். சதீஷ், யோகி பாபு மற்றும் சுவாமிநாதன் போன்ற சிறந்த நடிகர்களுடன் இந்த திரைப் படத்தின் படப்பிடிப்பு ஒரு நகைச் சுவையான அனுபவமாக இருந்தது. மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியில் இந்த வார இறுதியில் பிஸ்தா திரைப்படத்தை அனைவரும் கண்டு மகிழுங்கள்.

இது குறித்து நடிகர் ஷிரிஷ் சரவணன் கூறுகையில், “தமிழ் திரையுலகில் இது எனது மூன்றாவது படம், கலர்ஸ் தமிழில் பிஸ்தாவின் பிரீமியர் காட்சி மூலம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து இதைப் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விருப்பமில் லாத திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சித்தாந் தத்தின் புத்திசாலித்தனம் மற்றும் மகிழ்ச்சியுடன், வரும் ஞாயிற்றுக் கிழமை தங்கள் அன்புக்குரியவர் களுடன் இருந்து சிறந்த பொழுது போக்கு அம்சங்களை கொண்டு இந்த திரைப்படபம் பார்வையா ளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் என்றார் ”

உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக பிஸ்தா திரைப்படத்தை கலர்ஸ் தமிழில் இந்த ஞாயிற்றுக் கிழமை, நவம்பர் 18ஆம் தேதி மதியம் 2:00 மணிக்கு காணுங்கள். சன் டைரக்ட் (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808), மற்றும் Videocon D2H (CHN NO 553)

 

Related posts

Marco, the Pan-India Movie on Sony LIV

Jai Chandran

Gautham Karthik and Cheran starring Anandham Vilayadum Veedu second schedule

Jai Chandran

ராபர் படம் பேசும் முக்கிய விஷயம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend