படம்: ரங்கோலி
நடிப்பு ஹம்ரேஷ், ஆடுகளம் முருகதாஸ், பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அமித் பார்கவ்
தயாரிப்பு ஜி. சதீஷ் குமார், கே.பாபு ரெட்டி,
இசை: சுந்தரமூர்த்தி கே.எஸ்.
ஒளிப்பதிவு: ஐ.மருதநாயகம்
இயக்கம்: வாலி மோகன்தாஸ்
பி ஆர் ஒ: சதீஷ், சிவா (AIM),
சலவை. தொழிலாளி ஒருவர் கார்ப்பரேசன் பள்ளியில் படிக்கும் தன் மகன் சத்யாவை (ஹம்ரேஷ்) சி பி எஸ் இ பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க எண்ணுகிறார். போதிய வருமானம் இல்லாத நிலையில் குடும்பமே வேலைக்கு சென்று படிக்க வைக்கிறது. புதிதாக சேர்ந்த பள்ளியில் மாணவர்கள் சிலர் சத்யாவை தொந்தரவு செய்கின்றனர் . அவர்களுடன் சத்யா சண்டைக்கு செல்கிறான். தங்கள்.வகுப்பில் படிக்கும். பார்வதி ( பிரார்த்தனா) யாருடன் பேசி பழகுகிறார் என்பதில் சத்யாவுக்கும் சக மாணவர்களுக்கும் போட்டி நடக்கிறது. ஒரு கட்டத்தில் பார்வதியை சத்யா காதலிப்பதாக ரெஸ்ட் ரூம் சுவற்றில் எழுதி இருப்பது புகார் ஆகி சத்யாவை பள்ளியை விட்டு அனுப்ப பிரின்ஸ் பால் முடிவு செய்கிறார் . அவரது காலில் விழுந்து சத்யா மன்னிப்பு கேட்பதால் மன்னிக்கிறார் மீண்டும் சத்யா சக.மாணவனை அடிக்கிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
பள்ளி மாணவர்கள் பற்றிய கதை வந்து நீண்ட நாள் ஆகிவிட்டது. அப்படி வரும் படங்கள் ஒரு கட்டத்தில் காதல் கதைகளாகத் தான் மாறியிருக்கின்றன. ரங்கோலி படம் சற்று மாறுபட்டு சிந்திக்கப்பட்டிருக்கிறது.
15 வயது என்பது மனதை அலைபாயவிடும் காலகட்டம் என்பதால் அதற்காக சில. ஈர்ப் பான காட்சிகள் வைக்கப்பட்டிருந் தாலும் அதையே பிரதானமாக எடுக்காதது ஆறுதல் . புதுமுக ஹீரோ சத்யா கதாபாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கும் ஹம்ரேஷ் துடிப்பும் சுறுசுறுப்பும் நிறைந்து மனதில் இடம்.பிடிக்கிறார் .
ஓட்டம் ஓட்டம் ஒட்டம் என பல காட்சிகளில் நண்பர்க ளுடன்.ஓடிக் கொண்டேயிருக்கிறார் . சிரிக்க வேண்டிய வயதில் பல காட்சி களில் .முறைப்பாகவே காட்டாப் படுகிறார். அசப்பில் ஜி வி பிரகாஷை போலவே தெரிகிறார்
தன்னை வேறு பள்ளியில் சேர்க் கப்போவதாக தந்தை முருகதாஸ் கூறியதும் அதற்கு மறுத்து அடம் பிடிக்கும் ஹம்ரேஷ் வேறு வழியில் லாமல் அந்த பள்ளியில் போய்ச் சேர்வதும், நடத்தும் பாடம் புரியாமல் தேர்தலில் குறைந்த மார்க் வாங்குவது, சக மாணவர் களுடன் மோதல் சர்ச்சை என்று நடப்பதால் பழைய பள்ளியின் இனிமையான வாழக்கை சிதைந்து ஹம்ரேஷுக்கு படிப்பதே சுமையாகிப் போவது இதுபோன்ற சூழலில் சிக்கும் எல்லா மாணவர் களுக்கும் உள்ள கஷ்டம்தான்.
தன் ஒருவன் படிப்புக்காக தந்தை, தாய். அக்கா என எல்லோ ருமே.வேலைக்கு சென்று சம்பாதித்து கஷ்டப்படுவதை கண்டு கண்கலங்க ஹம்ரேஷ் அவர்களை கஷ்டப்படுத்தக்கூடாது என்று எடுக்கும் முடிவு பாராட்டு பெறுகிறது.
ஆடுகளம் முருகதாஸ் மற்றும் அவரது மனைவியாக நடித்திருப் பவர் இவர்களின் மகளாக நடித்தி ருப்பவர் எல்லோருமே கதாபாத் திரங்களாக மாறியிருக்கின்றனர் .
நல்லவேளையாக காதல் கத்தரி காவெல்லாம் எதுவும் இல்லாமல் நீட்டா ஒரு பள்ளிக் கதையாக. படத்தை இயக்குனர் வாலி மோகன்தாஸ் உருவாக்கி இருக் கிறார் . எந்த பள்ளியில் படித் தாலும் நன்கு படிக்கும் மாணவன் வெற்றி பெறுவான் என்பதை வசனத்தில் சொல்லியிருப்பது ஓ கே தான் ஆனால் அதை.ஒரு காட்சியாக சித்தரித்திருந்தால் அரசு. பள்ளி மாணவர்.களுக்கு இன்னும் ஒரு .பூஸ்ட் கொடுத்தது போல் இருந்திருக்கும்
சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையும், ஐ.மருதநாயகம் ஒளிப்பதிவும் மாணவர்களுக்கு ஈடு கொடுத்து ஓடியிருக்கிறது
ரங்கோலி – அரசு பள்ளியா? , தனியார் பள்ளியா? என்று குழம்பும் பெற்றோருக்கு ஒரு தீர்வு

