Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

யானை முகத்தான் (பட விமர்சனம்)

படம்: யானை முகத்தான்

நடிப்பு: யோகி பாபு, ரமேஷ் திலக், கருணாகரன், ஊர்வசி

தயாரிப்பு: ரெஜிஷ் மிதில்லா, லிஜோ ஜேம்ஸ்

இசை : பரத் சங்கர்

ஒளிப்பதிவு: கார்த்திக் எஸ் நாயர்

இயக்கம்: ரெஜிஷ் மிதில்லா

பி ஆர் ஓ: ஜான்சன்

ஆட்டோ ஓட்டும் கணேஷ் ( ராஜ் திலக்)  ஊரெல்லாம் கடன் வாங்கிவிட்டு திருப்பி தர முடியாமல் திணறுகிறார். விநாயகர் பக்தரான இவர் தன் கஷ்டத்தை தீர்க்கும்படி வேண்டு கிறார். தாமரை மீது படத்தில் அமர்ந்திருந்த பிள்ளையார் திடீரென்று மறைந்துவிட அதிர்ச்சி அடைகிறார் கணேசன். மனிதன் வடிவில் (யோகி பாபு) கணேசன் முன் வரும் பிள்ளையார் அவனது கஷ்டங்களை கேட்கிறார். ஆனாலும் அவன் வாங்கிய கடனை அடைக்க முடியாது என்று கறாராக கூறுவதுடன், நீ யாரையும் ஏமாற்றாமல் பொய் சொல்லாமல் நல்லவனாக மாறினால் எனது விஸ்வரூபத்தை காட்டுகிறேன் என்கிறார். கணேசன் நல்லவனாக மாறினானா, அவனால் பிள்ளை யாரின் விஸ்வரூபம் காண முடிந்ததா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

யானை முகத்தான் என்று பெயர் வைத்தபடி நிஜமாலுமே இது விநாயகர் பற்றிய கதையாகத் தான் உருவாகியிருக்கிறது இப்படம். ஆனால் பெயருக்குக்கூட விநாயகர் அவதாரத்தை காட்டாமல் முழுக்க யோகிபாபுவை விநாயகர் என்று சொல்லி கதையை நகர்த்துகிறார்கள்.
அப்படியாவது அவர் ஏதாவது மாயா ஜாலங்கள் காட்டுகிறாரா என்றால் அதுவும் இல்லை. வழக்கம்போல் கலாய் பேச்சை பேசி சிரிப்பை வரவழைக்க பார்க்கிறார்.

“நீ வாங்கிய கடனை நான் ஏன் அடைக்க வேண்டும்”, “தின்ற வடைக்கு கொடுக்க காசு இல்லை” என்றெல்லாம் விநாயகரை டப்பு இல்லாத சாமியாக காட்டியதுதான் ஏனென்று புரியவில்லை.
ஆனால் நல்லவனாக, நேர்மையாக வாழ் என்ற அட்வைசெல்லாம் சொல்வது நன்றாகத் தான் இருக்கிறது.

ராஜ்திலக் விநாயகர் பக்தராக மட்டுமல்லாமல். முழுநேரமும் பிரேமை ஆக்ரமித்து நிற்கிறார்.

ராஜஸ்தான் வரை பெரியவருக்கு துணையாக செல்லும் ராஜ் திலக் பின்னர் அவரை அவரது குடும்பத்தில் சேர்க்க முயற்சிப் பது மனிதாபிமான காட்சிகள்.

விநாயகரின் விஸ்வரூபம் காட்சியை யோகி பாபு காட்டப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இயக்குனர் அதை யாவது கொஞ்சம் பில்டப்பாக காட்டியிருந்தால் ஆறுதலாகவும் ஹைலைட்டாகவும் இருந்தி ருக்கும்.

ஊர்வசி, கருணாகரன் எல்லாம் பெயரளவுக்கு வந்து செல்கின்ற னர்.

பிள்ளையார் கதாபாத் திரத்தில் இருக்கும் யோகிபாபு “இறைவனிடம் கையேந்துங்கள்” என்று நாகூர் அனிபா பாடல் பாடுவது, ஏசுவை பார்த்தேன் என்று சொல்வதெல்லாம் மத நல்லிணக்கமாகவே பார்க்க வேண்டி உள்ளது.

தாமரை மேலிருக்கும் விநாயகர் காணாமல் போவது வில்லங்க மான விஷயம் தான். சங்கிகள் பார்த்தால் விஷயத்தை பூதகர மாக்கி விடுவார்கள் உஷார் உஷார்..

“இன்னு நாள்” என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தை ரெஜிஷ் மிதில்லா இயக்கியுள்ளார். திரைக்கதையை காமெடி சேர்த்து வேகப்படுத்தியி ருந்தால் ரசிக்கும்படி இருந்தி ருக்கும்.

யானை முகத்தான் – முகம்தானி ருக்கிறது யானையை காணோம்.

Related posts

MalaysiaToAmnesia – A ZEE5 Original Film premiering 28th May!

Jai Chandran

“KAATHUVAAKULA RENDU KADHAL ON DISNEY+ HOTSTAR FROM 27th MAY

Jai Chandran

ThanneVandi is all set release in theatres from 17th Dec

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend