Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பா.ரஞ்சித்தின் மார்கழி மக்களிசை விழாவில் கனிமொழி எம். பி பங்கேற்பு..

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சியை நடத்திவருகிறார்.

மார்கழிமாதத்தில் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெறும், தமிழகத்திலும், மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பலவேறு இசைக்கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்வார்கள்.

மேடை கிடைக்காத கலஞர்களுக்காகவும், நாம் கொண்டாடுகிற நம் ஆதி இசை வடிவத்தினை மேடை அமைத்து கொண்டாடி மகிழ்வதும், நம் இசைக்கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக விருதுகள் வழங்குவதும் நோக்கம்.

ஐந்து வருடங்கள் வெற்றிகரமாக நடைபெற்று வந்த இசை நிகழ்ச்சி இந்த முறை 6 ம் ஆண்டு மிகப்பிரமாண்டமான முறையில் சென்னை பச்சையப்பா கல்லூரி மைதானத்தில் துவங்கியிருக்கிறது.

முதல் நாள் துவக்கவிழாவில் பல்வேறு கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
துவக்கவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக. கனிமொழி MP,
திருமதி ஆம்ஸ்ட்ராங்,
இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் அமீர், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் சதீஷ் , இயக்குனர் வினோத்,
எழுத்தாளர் இமையம்,
இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்
இசையமைப்பாளர் நிவாஸ் k பிரசன்னா, பாடகர் சத்யன், நடிகர்கள் ஜான்விஜய், முத்துகுமார், குருசோமசுந்தரம், கலையரசன், கலை இயக்குனர் ராமலிங்கம் , ஒளிப்பதிவாளர் கிஷோர் , உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

பறையிசையுடன் முதல் நாள் நிகழ்வு பெரும் கொண்டாட்டத்துடன் துவங்கியது, மக்கள்பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

இயக்குனர் பா.இரஞ்சித் பேசுகையில் மார்கழியில் மக்களிசையின் நோக்கம் நிறைவேறி வருவதில் பெரும் மகிழ்ச்சி என்றார்.

இரண்டாம் நிகழ்வு இன்று மாலை 3 மணிக்கு துவங்குகிறது.
அனைவரும் வருக அனுமதி இலவசம்.

Related posts

4 இயக்குனர்களின் ’குட்டி ஸ்டோரி’ காதலர் தினத்தில் வெளியீடு

Jai Chandran

Independent music video HeySingari

Jai Chandran

30 வருடம் படுக்கையில் இருந்த நடிகர் பாபு மரணம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend