உலக நாயகன் கமல்ஹாசன் திரையு லகுக்கு வந்து 61 ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அந்த சாதனையை ’மாஸ்டர்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
’கமல்ஹாசன் சாரின் 61 வருட திரையுலக பயணத்துக்கான ரெபல் ஆன்த்தம் வெளி யிட எனக்கு கிடைத்த வாய்ப்பை எனது கவுரமாக கருதுகிறேன். ’சத்யா’ படத்தில் இடம் பெற்ற ’போட்டா படியுது’ கிளாசிக் பாடலுடன் இந்த வீடியோ டிசைனை சிம்பா டைரக்டர் அரவிந்த் ஸ்ரீதர் உருவாக் கினார்’ என லோகேஷ் என தெரிவித் துள்ளார்.
சினிமாவில் 61 வருட பயணத்துக்கு வாழ்த்து சொன்ன லோகேஷ் கனக ராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி கூறி யுள்ளதுடன்,’ ‘அறுபத்தோறு வருட சினிமாயுலக பயண வீடியோ பார்த்து மனம் நெகிழ்ந்தேன். உங்களின் அளவு கடந்த அன்புக்கு நான் தரும் பதில்பரிசு இதே அளவுக்கானதாக இருக்கும். இத்தகைய ஊக்கம்தான் இந்த மராத்தான் ரேஸில் தொடர்ந்து என்னை ஓட வைக்கின்றது; என கமல் கூறி உள்ளார்.
0கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். அடுத்து ’தலைவன் இருக்கிறான்’ படத்தில் நடிக்கிறார்.