Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சந்திரமோகன் மறைவுக்கு கமல் இரங்கல்

தமிழ் மற்றும் தெலுங்கு.  மொழி படங்களில் நடித்த சந்திரமோகன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

தெலுங்கு சினிமாவில் கோலோச்சிய மூத்த நடிகரும், எனது ஆத்ம நண்பருமான சந்திர மோகன் விடைபெற்றுக் கொண்டார்.

அவருக்கும் எனக்குமான பந்தம் தொடங்கியது என் 16வது வயதில். சந்திர மோகனுக்கு நடனம் பயிற்றுவிக்கும்படி தங்கப்பன் மாஸ்டர் என்னைப் பணித்தார். சந்திரமோகனின் தமிழில் தெலுங்கு வாடை சற்று தூக்கலாக இருக்குமென் பதால் அவர் கதாநாயக னாக நடித்த படத்திற்கு என்னையே தமிழில் டப்பிங் பேசும்படி பணித்தது ஏவிஎம் நிறுவனம். அதுவரை டான்ஸ் அஸிஸ்டெண்டாக இருந்த எனக்கு அது ஒரு புதிய வாய்ப்பாக அமைந் தது.

இப்படித் தொடங்கிய எங்கள் பயணத்தில், தமிழில் பெருவெற்றி பெற்ற 16 வயதினிலே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் என் கதாபாத் திரத்தை சந்திரமோகன் ஏற்றார்.

எங்கள் இருவருக்குமான பொதுவான ஆர்வங்களில் முதன்மையானது சாப்பாடு. தேடித்தேடி ரசித்து ரசித்து உண்பதில் மகா சமர்த்தர். அதை விட வாழும் கலை அறிந்த நிபுணர். தன்னையும், தன்னைச் சார்ந்தவர் களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் சூத்திரம் அவருக்குத் தெரியும்.

அபாரமான நடிகர், எப்போதும் கற்றுக் கொள்ளத் தயாராக இருந்த மாணவர், என் இனிய நண்பர் நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார். இத்தருணத்தில் அவரது நினைவுகள் என்னைச் சூழ்ந்து நிற்கின்றன. சென்று வாருங்கள் என் ஆப்தரே!

Related posts

Prasanth Varma’s JAI HANUMAN Starring Rishab Shetty..

Jai Chandran

Academy of Motion Picture Welcomes Ram Charan

Jai Chandran

777CharlieTeaser: beauty of their lyrics makes

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend