Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கலைஞரின் பண்பு முதல்வர் ஸ்டாலினிடம் உள்ளது: கமல்ஹாசன் உருக்கம்

சென்னையில் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, “கலைஞரின் பண்பு முதல்வர் ஸ்டாலினிடம் உள்ளது’ என்று  கமல்ஹாசன் உருக்கமாக கூறினார்

விழாவில் கமல்ஹாசன்  பேசியதாவது:

திரைப்படத்துறையினர் அனைவ ருக்கும் வணக்கம். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி இருக்கும் மேடையில் நான் எப்போதும் ஓரமாக தான் இருப் பேன். அதனால் தான் நடு மேடை யில் நிற்காமல் தொகுப்பாளர் பேசும் இடத்தில் இருக்கிறேன். என்னுடைய தமிழ் ஆசான்கள் கருணாநிதி, நடிகர் சிவாஜி, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்.

கருணாநிதி தன்னையும் வளர்த்தார், தமிழையும் வளர்த்தார், தமிழ்நாட்டையும் வளர்த்தார். தன்னுடைய கொள்கைகளை தன்னுடைய வசனங்களில் பொருத்துவார். அவர் நவீன
தமிழ் சினிமாவின் வசன சிற்பி என்று சொன்னால் மிகை ஆகாது. சிறு வயதில் என் அக்காவிடம் கருணாநிதி போன்று முடி வைத்து விடுங்கள் என்று சொல்லுவேன்.
அவர் தன்னை கலை உலகின் பிரதிநிதியாகவே காட்டிக்கொள்ள விரும்பினார். அவர் எனக்கு சூட்டிய கலை ஞானி என்ற பட்டத்தை என்றும் மறவேன்.
தமிழ் சினிமாவின் மக்களுடன் உறவாடும் வாய்ப்பை என்றும் அவர் விடவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது எதையும் விடக் கூடாது என்பது நான் அவரிடம் இருந்து கற்று கொண்ட பாடம். அதைதான் நான் என்னுடைய வாழ்க் கையில் பின் தொடர் கிறேன்.
விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் மாண்புக்கு வணக் கத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த பண்பு எங்கிருந்து கற்றுக் கொண்டது என்பது நமக்கு தெரியும். கலைஞரின் பண்பு முதல்- அமைச்சரிடம் உள்ளது.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Related posts

சல்மானுடன் மோதல் அனுபவம்- இம்ரான் ஹாஷ்மி

Jai Chandran

‘தீபத்திற்கு பெயர் பெற்ற திருவண்ணாமலைக்கே 15 லட்சம் விளக்கு!’ வாங்கி தந்த வளரும் வாரிசு நட்சத்திரம்!

CCCinema

Actor Jai got his first jab done today

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend