Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

விமானம் (பட விமர்சனம்)

படம்: விமானம்

நடிப்பு: சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், மொட்டை ராஜேந்திரன்,  அனுசுயா,  தன்ராஜ், ராகுல் ராமகிருஷ்ணா,

தயாரிப்பு: கிரண் கொர்ரபாட்டி மற்றும் ஜி ஸ்டுடியோஸ்

இசை: சரண் அர்ஜுன்

ஒளிப்பதிவு; விவேக் கலேப்பு

வசனம்:  பிரபாகர்

இயக்கம்: சிவ பிரசாத் யானலா

பி ஆர் ஒ: யுவராஜ்

ஒரு கால் ஊனமுற்றிருந்தாலும் பொது கழிப்பிடம் சேவையாற்றி அதில் வரும் வருமானத்தில் தன் மகனை படிக்க  வைத்து  வாழ்க்கை நடத்துகிறார் வீராய்யா. (சமுத்திரக்கனி). இவரது மகன்  இராஜுக்கு விமானம் என்றால் உயிர் எப்படியாவது அதில் ஒருமுறையாவது பயணம் செய்ய ஆசைப்படுகிறான்.  அவனை விமானத்தில் அழைத்துச் செல்வ தாக  உறுதி செய்கிறார். அதற்கு 10 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கிடையில் ராஜுக்கு உடல்நிலை பாதிக்கிறது கேன்சர் நோயால் பாதித்ததால்  வீயரய்யா பதற்றமாகிறார். மகன் எந்த  நேரத்திலும்  இறந்துவிடலாம் என்று டாக்டர் சொல்வதால் மகனின் ஆசையை நிறைவேற்ற பணம் புரட்ட அலைகிறார் இறுதியில் மகன் ஆசையை நிறை வேற்றினாரா என்பதே கிளை மாக்ஸ்.

மிக எளிமையாக சில படங்கள் வலிமையான கதையுடன்  உருவாவதுண்டு அந்த வரிசையில் இடம் பிடிக்கும் படம் விமானம். இதில் ஆடம்பரம், பளபளப்பு, ஆக்ஷன் எதுவும் இல்லை ஆனால் தந்தையின் பாசம், ஏழ்மையின்  இயலாமை, வறுமையிலும் நட்ப்பின் பெருமை போன்ற அம்சங்கள் படத்தில் இழையோடு வதும் அதற்கேற்ற அர்த்தமுள்ள  பிரபாகர் வசனங்கள் , சமுத்திரக் கனி சிறுவன் துருவன்   உருக்க மான நடிப்பு எல்லாமே படத்தை இரத்தமும் சதையும்  கொண்ட உயிரோவியமாக்குகிறது

கால் ஊனமுற்றவராக சமுத்திரக்கனி இரண்டு ஊன்று கோல் வைத்துக்கொண்டு நடப்பதும் உடல் ஊனமென்றாலும் உள்ளம் தூய்மையாக வைத்துக்  கொண்டு திருட்டுபழி விழும்போது போலீஸ் அடியை தாங்கிக் கொண்டு   அடிக்கு பயந்து பழி ஏற்காமலும் அவர் திருடவில்லை என்று தெரிந்ததும் இன்ஸ்பெக்டர் நூறு ரூபாய் தர,  யார் காசுக்கும் நான் ஆசைப்பட மாட்டேன்  என்று சமுத்திரக்கனி  சொல்வதும் வேடத்தின் மீதான மரியாதையை உயர்த்திக்காட்டுகிறது.

ஒரு வழியாக விமானப் பயணத் திற்கு மகனை சமுத்திரக்கனி அழைததுச் செல்வது எதிர்பாராத உருக்கமாக அமைந்து கண்களை கலங்க வைக்கிறது.

விமான பணிப்பெண்ணாக மீரா ஜாஸ்மின் வரவு எதிர்பாராத சர்ப்ரைஸ்.

விபசார பெண்ணாக நடித்தி ருக்கும் அனுசுயா. கவர்ச்சிக்கு  பயன்பட்டிருக்கிறார். மற்ற பாத்திரங்களின் இயல்பான நடிப்பில் ஜீவன் உண்டு.

கிரண் கொர்ரபாட்டி மற்றும் ஜி ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கி றார்கள்

சரண் அர்ஜுன் இசை காட்சியோடு ஒன்றியிருக்கிறது

விவேக் கலேப்பு ஒளிப்பதிவும்,  பிரபாகர் வசனமும்  காட்சியையும் கவனத்தையும் தக்க வைக்கிறது.

இயக்குனர் சிவ பிரசாத் யானலா ஒரு உருக்கம் நிறைந்த படைப்பை தந்திருக்கிறார்.

விமானம் – ஏழையின் வாழ்க்கை பயணம்.

 

 

 

 

 

 

Related posts

Actor Siddarth apologies to Saina

Jai Chandran

Dhurandhar Returns to Cinemas Worldwide..

Jai Chandran

Actress AnjenaKirti

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend