Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கடைசி தோட்டா ( பட விமர்சனம்)

படம்: கடைசி தோட்டா

நடிப்பு: டத்தோ ராதாரவி, ஶ்ரீகுமார், கொட்டாட்சி, வனிதா, வையாபுரி

தயாரிப்பு: ஆர் வி ஆர் ஸ்டுடியோஸ்

இசை: வி ஆர் சுவாமிநாதன் ராஜேஷ்

ஒளிப்பதிவு: மோகன் குமார்

இயக்கம்: நவீன் குமார்

பி ஆர் ஓ: கிளாமர் சத்யா

கொடைக்கானலில் உள்ள அரசியல்வாதி வீட்டிற்கு அதிகார்கள்  ரெய்டு வருகிறார்கள் .அதை அறிந்து தன் வீட்டில் உள்ள பணத்தை அதே ஊரில் உள்ள காட்டேஜில் பதுக்கி வைக்கிறார். இந்நிலையில் காட்டேஜில் ஒரு இளம் பெண் சுட்டுக் கொல்லப்படுகிறார். அந்த கொலையை விசாரிக்க போலீஸ் அதிகாரி வனிதா டீமுடன் அங்கு வருகிறார். காட்டேஜில் தங்கி இருப்பவர்களை துருவி துருவி விசாரிக்கிறார். அந்தக் கொலையை செய்தது நான் தான் என்று ராதாரவி சொல்லி அதிர்ச்சியை தருகிறார். அதன் பிறகு நடப்பது என்ன? கொலையை ராதாரவி தான் செய்தாரா? கொலை நடப்பதற்கு என்ன காரணம்? என்ற பல்வேறு கேள்விகளுக்கு சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்து விடை தருகிறது கிளைமாக்ஸ்.

காட்டேஜில் மனைவியுடன் ஹனிமூன் கொண்டாட வந்த ஸ்ரீகுமார் அங்கு நடக்கும் கொலையை பார்த்துவிட்டு பதட்டம் அடைவதும், அந்தக் கொலையை செய்வது ராதாரவிதான் என்பதை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஒவ்வொரு முறை ராதாரவியை பார்க்கும்போதும் தன்னையும் ஏதாவது செய்து விடுவாரோ என்ற பயத்தில் நடுங்கி கொலையாளி யார் என்பதை போலீஸ் அதிகாரி வனிதாவிடம் சொல்லவும் முடியாமல், அதை மறந்து விட்டு சாதாரணமாக இருக்கவும் முடியாமல் காட்சிகள் நகர நகர தலையைப் பீய்த்துக் கொண்டு டென்ஷனில் அலறி மாறுபட்ட நடிப்பை தந்திருக்கிறார் ஸ்ரீகுமார் .

ராதாரவிக்கு திரை உலகில் இது ஐம்பதாவது வருடம் இன்னமும் அவர் எனர்ஜி குறையாமல் வில்லன் வேடத்தில் நடிப்பது அவரது மன உறுதியை காட்டுகிறது.

தடாலடி, அடாவடி வில்லனாக இல்லாமல் கையில் ஸ்டிக் வைத்துக் கொண்டு புன்சிரிப்புடன் தளர்ந்த நடையுமாக நடந்து மாறுபட்ட அசத்தலான நடிப்பை தந்திருக்கிறார் ராதாரவி.

தன்னை போலீசில் ஸ்ரீ குமார் சிக்க வைத்து விடுவாரோ என்ற எண்ணத்தில் போலீஸிடம் ஸ்ரீகுமார் வாக்குமூலம் தர அமரும் ஒவ்வொரு முறையும் ராதாரவி என்ட்ரி கொடுத்து அவருக்கு எச்சரிக்கை சிக்னல் கொடுத்து பேசவிடாமல் மௌனியாக்கி விடுவது சைலன்ட் வில்லத்தனம்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வனிதா நடித்திருக்கிறார். சிகரெட் புகைத்துக் கொண்டு, தெனாவட்டு நடை நடந்து காட்டேஜில் இருப்பவர்களிடம் உருட்டல் மிரட்டலாக கொலை பற்றி விசாரணை நடத்தி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

வையாபுரி, கொட்டாச்சி மற்றும் யூடியூப் கோஷ்டி காமெடி லூட்டி அடித்து கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள்.

வி ஆர் சுவாமிநாதன் ராஜேஷ் இசை படத்துக்கு கை கொடுத்திருக்கிறது. பின்னணி இசையில் திடீர் பயமுறுத்தல்கள் இல்லாமல் அதே சமயம் விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

காட்சிகளை விசாரணை என்ற பெயரில் போரடிக்காமல் கேப் விட்டு கேப்விட்டு காமெடியுடன் கொண்டு சென்றிருக்கும் இயக்குனர் நவீன்குமார். கடைசியில் ஒரு  சஸ்பென்சை உடைக்கும்ப்போது சபாஷ் போட வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் மோகன் குமார் கொடைக்கானலை கழுகு பார்வையில் காட்டி பரவசம் ஏற்படுத்துகிறார்.

விசாரணை நடத்தும் போது வரும் ரிப்பீட் காட்சிகளை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

கடைசி தோட்டா – பார்க்க தகுந்த சஸ்பென்ஸ் த்ரில்லர்.

Related posts

The First look of Hostel

Jai Chandran

Happy Birth Day To ParvatiNair

Jai Chandran

“பிகினிங்” ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள் !

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend