கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. சிபிராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். நந்திதா சுவேதா, ஜெயபிரகாஷ், ஜே எஸ் கே சதிஷ்குமார் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். அருண்பாரதி, கு.கார்த்திக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். சைமன் கே.கிங் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ஒரு மில்லியன் வியூஸ் கடந்திருக்கிறது. சமீபத்தில் ஆடியோ வெளியிடப்பட்டது. வரும் 28ம் தேதி படம் திரைக்கு வருகிறது. தற்போது படத்தில் சுமா ரங்கநாத்த்தின் ஸ்டைலான கவர்ச்சி நட்னத்தில் உருவான ஹைக்கி பேபி பாடல் வீடியோ வெளியானது.