Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

காடப்புறா கலைக்குழு (பட விமர்சனம்)

படம்: காடப்புறா கலைக்குழு

நடிப்பு: முனிஸ்காந்த், காளிவெங்கட், சூப்பர் குட் சுப்ரமணியம், மைம் கோபி, ஹரிகிருஷ்ணா,. ஶ்ரீலேகா, சுவாதி, ஆந்தக்குடி இளையராஜா

தயாரிப்பு: டாக்டர் முருகானந்தம், டாக்டர் சண்முகப்பிரியா

இசை: ஹென்றி

ஒளிப்பதிவு: வினோத் காந்தி

இயக்கம்: ராஜா குருசாமி

பி ஆர் ஒ: சதீஷ் ( AIM)

 

கிராமத்தில் காடப்புறா கலைக்குழு நடத்தி வருகிறார் பாவாடை சாமி  (முனிஸ்காந்த்). அதே கிராமத்தில் ரெக்கார்ட் டான்ஸ் குழு நடத்து கிறார் பென்சில் மீசை பெருமாள் (சூப்பர் குட் சுப்மணியம்). அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் ஈஸ்வரமூர்த்தி  (மைம் கோபி) நிற்க அவரை எதிர்த்து மற்றொருவர் போட்டியிடுகிறார். இவருக்கு பாவாடை சாமி ஆதரவு தெரிவிக் கிறார். இதில் ஈஸ்வரமூர்த்தி கோபம் அடைகிறார். தேர்தலில் ஈஸ்வரமூர்த்தி தோற்கிறார். கோபத்தில் பாவாடை சாமியை கொல்ல அடியாட்களை ஏவுகிறார். இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

கரகாட்டக்காரர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் வாழ்க்கையை சொல்கிறது கதை. பாவாடை சாமியாக முனிஸ்காந்த், பென்சில் மீசை பெருமாளாக சூப்பர்குட் சுப்ரமணியம் இருதுருவங்களாக நடித்திருக்கின்றனர்.

சுமார் 100 கிலோ உடல் எடை வைத்துக்கொண்டு முனிஸ்காந்த் தலையில் கரகம் வைக்காமல ஆடியிருக்கும் ஆட்டம் உண்மையி லேயே அவரது தன்னம்பிக்கையை காட்டுகிறது. கேலி செய்வார் களோ,.கிண்டல் செய்வார்களோ என்று எண்ணாமல் அவர் அந்த பாத்திரத்துக்கு 100 சதவீதம் பங்களிப்பு செய்திருப்பது படம்.முழுவதும் தெரிகிறது.

திண்ணை பாட்டிக்கும், முனிஸ் காந்துக்குமான  பாச உணர்வு நெகிழ வைக்கிறது. ஊரெல்லாம் பெண் தேடி மூக்குடைபடும்போது தான் ஒரு காமெடியன் என்பதை நினைவுபடுத்துகிறார். கிளை மாக்சில்  எங்கே முனிசை கொன்று விடுவார்களோ என்ற பதற்றம் பரபரப்பாக மாறுகிறது

பென்சில் மீசை பெருமாளாக சூப்பர் குட் சுப்ரமணி ,  சிவாஜி  ரேஞ்சுக்கு தன்னை பில்டப் கொடுப்பது கலகலப்பு. பாட்டு பாடும் இன்டர்வியூ நடத்தி செய்யும் அமர்க்களமும் கலகலப்பின் தொடர்ச்சி.

மைம் கோபி போதுமான மிரட்டல் கள் தந்து வில்லத்தனத்தை செய்து முடிக்கிறார்.

முனிஸ்காந்த் குழுவில் கரகாட்டம் ஆடும் மயிலு  சுவாதி  கரகாட்டத்தில்  ஸ்டைலில்  காட்டி அசத்துகிறார். ஒரே ஆட்டத்தோடு அவரை நிறுத்தியிருப்பது  ஏமாற்றம்

ஹரி கிருஷ்ணா, ஶ்ரீ லேகா இளவட்ட ஜோடிகளாக காதல் சிறகடிக்கின்றனர்.

டாக்டர் முருகானந்தம், டாக்டர் சண்முகப்பிரியா தயாரித்திருக் கிறார்கள். முதல் பட தயாரிப்பு என்றாலும் வெறும் மசாலா படம் எடுக்காமல் கிராமத்து கலை வளர்க்கும் விதமாக தயாரித்தி ருப்பது  பாராட்டு பெறுகிறது.

ஹென்றியின் கிராமத்து இசை தெறிக்கவிடுகிறது.

வினோத் காந்தி கிராமத்து இயற்கையை பசுமை மாறாமல் அள்ளி வந்திருக்கிறார்.

ராஜா குருசாமி கதை, திரைக்கதை நேர்த்தி அவரை முழுமையான இயக்குனராக கண்முன் நிறுத்து கிறது.  இருக்கும் நடிகர்களை வைத்து ரசிக்கும்படியாகவும் , சென்டிமென்ட் டச்சுடனும்  படத்தை தந்திருப்பது  அவரது திறமைக்கு சான்று கூறுகிறது.

காடப்புறா கலைக்குழு –  நீண்ட நாட்களுக்கு பிறகு மண்மணம் பேசும் கிராமத்து கதை.

 

 

 

 

 

Related posts

HostelGaana Video song from Hostel

Jai Chandran

Ustaad Ram Pothineni arrived with his first attack ‘The Warriorr’ teaser

Jai Chandran

வலிமை 100 மில்லியன் ஸ்ட்ரீமிங்  பார்வை நிமிடங்கள் கடந்து சாதனை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend