Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபு – வெற்றி – கிருஷ்ண பிரியா நடிக்கும் ஆண் மகன்

முதன்மை கதாபாத்திரத்தில் துள்ளல் கலந்த அப்பாவாக இளைய திலகம் பிரபு நடிக்க.. 8 தோட்டாக்கள் வெற்றி கதாநாயக னாக நடிக்கிறார் கதாநாயகியாக கேரளத்து பைங்கிளி கிருஷ்ண பிரியா அறிமுகம் ஆகிறார்

இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர் வி உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை, மற்றும் பலர் நடிக்கின் றனர்,

கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் இளம் தயாரிப்பாளர் KM சபி மற்றும் பாரூக் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக திரைப்படம் உருவாகிறது!

வெற்றிப்பட இயக்குனர்களான வசந்த் சாய் மற்றும் நந்தா பெரியசாமி அவர்களுடன் பணி புரிந்த மகா கந்தன் இயக்கத்தில் கத்திரி வெயிலிலும் அதிதி புதிரியாய் தயாராகிறது!

ஆண்மகனின் அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து பட்டைதீட்ட… அடுக்கு மொழி நாயகர் டி ஆர் ஒரு பாடலை பாடுவது இப்படத்தின் தனிச்சிறப்பு!
நாடி நரம்புகளை நடனம் ஆட வைக்கும் துள்ளல் இசையோடு நவ்பல் ராஜா தமிழ் திரை உலகுக்கு புதிய இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்!

கிராமப்புற காட்சிகளை கண்ணுக்கு குளுமையாக ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனி படம் பிடித்துள்ளார் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம், தூத்துக்குடி, மரக்காணம், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது!விரைவில் இப்படம் திரைக்குவரவுள்ளது

Related posts

அஜீத் விரும்பி நடித்த விடா முயற்சி – மகிழ் திருமேனி பேட்டி

Jai Chandran

தீரஜ் நடிக்கும் “டபுள் டக்கர்” பட விழாவில்.மிஷ்கின் பரபரப்பு

Jai Chandran

கொரோனா பயத்தை அதிகரிக்கும் ஊடகங்கள்: தங்கர் பச்சான் பரபரப்பு புகார்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend