Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ராயர் பரம்பரை ( பட விமர்சனம்)

படம்: ராயர் பரம்பரை

நடிப்பு: கிருஷ்ணா, சரண்யா, ஆனந்தராஜ்,.மொட்டை ராஜேந்திரன் மனோபாலா, கிருத்திகா, அனுசுலா, ஆர்.என்.மனோகர்,கே ஆர் விஜயா, கஸ்தூரி, சர்மிளா, சின்னசாமி மவுனகுரு மற்றும் பலர்

தயாரிப்பு: சின்னசாமி மவுனகுரு

இசை: கணேஷ் ராகவேந்திரா

ஒளிப்பதிவு: விக்னேஷ் வாசு

இயக்கம்: ராம்நாத் டி.

பி ஆர் ஒ: சதீஷ் (,AIM)

 

ராயர் ஆனந்தராஜின் சகோதரி யாரையோ காதலித்து வீட்டை விட்டு ஓடியதால்  ஊரில் யாருமே காதலிக்க கூடாது என்று  மிரட்டி வைக்கிறார் ஆனந்தராஜ். தன் மகள் காதல் திருமணம்தான் செய்வாள் என்று ஜோதிடர் கூறியதால் ஊரில் திருமணம் ஆளாமலிருக்கும் சில இளைஞர் களை வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்து அனுப்பி விடுகிறார். ஆனால் வெளியூரிலி ருந்து வந்து தங்கியிருக்கும் கிருஷ்ணாவை ஆனந்தராஜ் மகள் ரகசியமாக காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் விஷயம் ஆனந்த் ராஜுக்கு தெரிய வர கோபம் அடைந்து கிருஷ்ணா வை சுட துப்பாக்கியுடன் புறப்படு கிறார். அடுத்து நடப்பது என்ன என்பதை சென்டிமென்ட்,  கலகலப்பு கலந்து சொல்கிறது கிளைமாக்ஸ்

ராயர் வேடத்தை ஏற்றிருக்கும் ஆனந்தராஜ் காமெடி வில்லனாக நடித்து கலகலப்பூட்டுகிறார். தன் மகள் யாரையாவது காதலிக்கி றாரா என்பதை அறிந்து சொல்ல ஆட்களை அனுப்புவதும், அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு கிருஷ்ணாவை ரகசியமாக மகள்  காதலிப்பதும்  அதை ரகசியமாகவே  வைத்திருக்கும் இயக்குனர்  ஒரு கட்டத்தில்  ஓப்பன் செய்து கதையை கலகலப்பு குறையாமல் இயக்கி சென்றிருக்கிறார்.

கிருஷ்ணா வெறுமனே காதல் மட்டும் செய்துவிட்டு செல்லாமல் கலகலப்பு நாயகனாகவும் தன்னை மாற்றியிருப்பது ரசனை.

கா க பி கட்சி நடத்தும் மொட்டை ராஜேந்திரனுடன் சேர்ந்து காமெடி அரட்டை அரங்கம் நடத்தியிருக் கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கே ஆர் விஜயா படத்தில் தலை காட்டியி ருக்கிறார். ஆனந்தராஜ்  தாயாக வரும் அவர் தனது மகள் நினைவில் கண்கலங்குவது உருக்கம். மகள் வேடத்தில் கஸ்தூரி நடித்திருக்கிறார். தாய் விஜயாவை கண்டதும் அவர் மீது சாய்ந்து பாசத்தை கொட்டுவது உச் கொட்ட வைக்கிறது.

கா க பி அதாவது காதலர்களை கண்டவுடன் பிரிக்கும் கட்சி நடத்தும் மொட்டை ராஜேந்திரன்   முழுநேர காமெடியனாக மாறியிருக்கிறார் ஆனந்தராஜிடம் மற்றவர்கள் முன் கத்தி பேசுவதும் பிறகு அவர் காலில் விழுந்து கதறுவதுமாக வடிவேலு பாணியில்  காமெடி ட்ரை செய்திருக்கிறார். ஆனந்தராஜ் கரடி முடி பிடுங்கும் காமெடி சிறுவர்களை கைகொட்டி சிரிக்க வைக்கும்.

ஒன்றுக்கு மூன்று ஹீரோயின்கள் போதாக்குறைக்கு மற்றொரு சப்ஸ்டியூட் என 4 நடிகைகள் படம்.முழுவதும் உலா வந்து இளமை விளையாட்டு விளையாடுவது குளிர்ச்சி.

மெசேஜ் சொல்லப்போகிறேன் என்ற எந்த வம்புக்கும்.போகாமல் காமெடிதான் நோக்கம் என்று தீர்க்கமான முடிவுடன் இயக்குனர். ராம்நாத். டி படத்தை இயக்கி யிருப்பது  ரிஸ்க் இல்லாமல் ரஸ்க் சாப்பிட்ட கதைதான். முடிந்தவரை கலகலப்பை படம்.முழுவதும் தூவியிருக்கிறார்.

சின்னசாமி மவுன குரு படத்தை  தயாரித்திருப்பதுடன்  கிருஷ்ணா கோஷ்ட்டிக்கு வீட்டை வாடகைக்கு விட்டு வாடகை வசூல் செய்ய முடியாமல் புலம்புவது கூடுதல் காமெடி

ஒரு சின்ன படத்துக்கு தெளிவான ஒளிப்பதிவை தந்து கண்கள் கூசாமல் செய்திருக்கிறார் விக்னேஷ் வாசு.

கணேஷ்  ராகவேந்திரா இசை கேட்கும்படி உள்ளது.

ராயர் பரம்பரை – பொழுது போகும்.

 

 

Related posts

விஜய் தேவரகொண்டா பட முன்னோட்டம் வெளியீடு

Jai Chandran

ரத யாத்திரையை நிறுத்தச் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க மாடடேன் திவ்யா சத்யராஜ்‌ அதிரடி

Jai Chandran

தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும்: கமல் விருப்பம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend