Trending Cinemas Now
விமர்சனம்

காடன் (பட விமர்சனம்)

படம்: காடன்
நடிப்பு: விஷ்ணு விஷால். ராணா, புல்கிட் சாம்ராட், ஜோயா ஹுசைன், ஸ்ரேயா பில்கன்கர்,
தயாரிப்பு: ஈராஸ் இண்டர்நேஷனல்
இசை: ஷாந்தனு மொய்த்ரா
ஒளிப்பதிவு: ஏ.ஆர்.அசோக்குமார்
இயக்கம்: பிரபு சாலமன்

ஜமீன்பரம்பரையை சேர்ந்த ராணாவின் மூதாதையர்கள் தங்கள் நிலங்களை காட்டு பகுதியாக விட்டுவிட அங்குள்ள மிருகங்களின் புகலிடமாக பல ஆண்டுகளாக மாறி கிடக்கிறது. அங்குள்ள யானைகளின் பாதுகாவலனாக ராணா காட்டுக்குள்ளேயே மிருகங்களுடன் வாழ்கிறார். ஒரு கட்டத்தில் அமைச்சர் ஒருவர் தன்து கனவு திட்டமாக காட்டின் பெரும்பகுதியை அழித்து நவீன நகரபுறம் அமைத்து அங்கு குடியிருப் புகள் கட்ட திட்டமிடுகிறார். இதற்காக காலம்காலமாக யானைகள் காட்டுக்குள் சென்று வரும் வழி தடங்களில் 6 கி மீட்டர் தூரத்துக்கு சுவர் எழுப்புகின்றனர். அதை எதிர்த்து குரல் கொடுக்கிறார் ராணா. நேரடி போராட்டம் மக்களை திரட்டி போராட்டம், கோர்ட்டில் வழக்கு போராட் டம் என பல வழிகளில் சுவர் கட்டுவதை தடுக்க முயல்கி றார். அவருக்கு பைத்தியம் என்ற முத்திரை குத்துகிறார் மந்திரி. திட்ட மிட்டபடி சுவர் எழுப்பப் பட்டநிலையில் வேறு இடங்களில் சுற்றிக் கொண்டிருந்த யானைகள் தங்களின் பழைய காட்டுக்கு திரும்பி வருகின்றன. வழித் தடத்தை அழித்து சுவர் எழுப்பி இருப் பதை கண்டு குழப்பிவிடுகின்றன. இதனால் கிராம மக்களை தாக்குகிறது. யானைகளின் அட்டகாசம் தாங்க முடியாத மந்திரியின் ஆட்கள் ஒரு யானையை சுட்டு வீழ்த்தி அடுத்தடுத்து மற்ற யானைகளை சுட்டு தள்ள முயல்கின்றனர். கூட்டத்தில் தாய் கண்ணம்மா என்ற யானை துப்பாக்கி குண்டுக்கு பலியாகிறது. யானையை சுட்டுக் கொன்றவனை சாகடிக்கும் ராணா யானை வழித்தடத்தை மீட்க நடத்தும் போராட்டத்தில் ஜெயித்தாரா என்பதற்கு படம் பதில் சொல்கிறது
விஷ்ணு விஷால், ராணா என இரட்டை ஹீரோக்கள் நடித்தி ருக்கின்றனர். அத்துடன் யானை கூட்டமும் நடித் துள்ளன.


விலங்குகளை வைத்து படம் எடுக்க ஆயிரம் பர்மிஷன் வாங்க வேண்டிய சூழலில் 10க்கும் மேற்பட்ட யானை களை நடிக்க வைத்து படமாக்கி அதை திரைக்கு கொண்டு வந்திருப்பதே பிரபுசாலமனின் முதல் வெற்றி
வீரபாரதி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் ராணா அந்த பாத்திரமாகவே மாறி இருக்கி றார். காட்டுக்குள் பறவை களின் ஒலியை கேட்டு வெளி யாட்கள் வந்திருக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ளும் ராணா பறவையைதொடர்ந்து சென்று வெளியாட்கள் வந்தி ருப்பதை கண்டு அவர் களை கட்டிடம் எழுப்ப விடாமல் தடுப்பது பரபரப்பின் ஆரம்பம். தொடர்ந்து கட்டிட பணிகள் நடப்பதால் அதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு போட்டு தடை பெறுவதும் தடை உத்தரவை கிழித்து போட்டு மீண்டும் கட்டிட பணிகள் நடப்பதை கண்டு அதிர்ச்சி அடையும் ராணா நேராக காட்டிலாகா அதிகாரி சம்பத் ராமை சந்தித்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி மிரட்டுவது, அவர் தட்டிக் கழித்தவுடன் ஆத்திரம் அடை யும் ராணா, சம்பத் ராமை புரட்டி எடுப்பது, கட்டிடங் களின் மேல் ஓடியபடி இருவரும் மோதிக் கொள்வது த்ரில். அடிவாங்கி மண்டை உடைந்து ரத்தம் கொட்டும் நேரத்திலும் சம்பத்ராம் சிரிக்கும் சிரிப்பில் வில்லத் தனம் தெறிகிறது.
ராணாதான் தங்களது கூட்டத்தை சேர்ந்த யானையை சுட்டுக்கொன்றதாக எண்ணிக் கொண்டு அவரையே யானைகள் கூட்டம் விரட்டு வதும் மீண்டும் இவர் யானை யின் தோழனாக ஆவது எப்போது என்ற ஏக்கமும் அடுத்தடுத்த காட்சிகளை ஆவலாக எதிர்நோக்க வைக் கிறது.
விஷ்ணு விஷால் யானைப் பாகனாக வருகிறார். அதிக மான காட்சிகள் இல்லா விட்டாலும் வரும் காட்சி களில் ஸ்கோர் செய்கிறார். தீவிரவாத பெண்ணை ஒருதலையாய் காதலிக்கும் விஷ்ணு அவரிடம் காதலை சொல்வதற்காக குயில்போல் கூவுவதாக சொல்லி கோழி போல் கத்தி மொக்கை வாங்கும்போது சிரிக்க வைக்கி றார். அவர் வளர்க்கும் கும்கி யானை சிமெண்ட் தூண் விழுந்து பலியாவதை கண்டு கதறி அழும்போது உருக வைக்கிறார்.
ராணா, விஷ்ணு விஷால், யானை கூட்டம் தவிர வேறு யாரும் பெரிதாக மனதில் பதியவில்லை. இரண்டு ஹீரோயின்கள் ஜோயா ஹுசைன், ஸ்ரேயா பில்கன்கர் கொடுத்தவேலையை செய்திருக்கின்றனர்.
ஈராஸ் இண்டர்நேஷனல் படத்தை தயாரித்திருக்கிறது. பிரபு சாலமன் படத்தை இயக்கி உள்ளார். யானை களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டால் அது எப்படி மனிதர் களை தாக்கத் தொடங்குகிறது என்பதை விளக்கி இருப்ப துடன் காடுகளை அழித்து இயற்கையின் சுழற்சியை பாதிப்படையச் செய்வதால் கொல்லை நோய்கள் மக்களை தாக்குவது பற்றியும் உணர்த்தி அதிகார வர்க்கத்தினரின் பேராசைக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.
ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.அசோக் குமார் முதல்படம்போல் இல்லாமல் அனுபவசாலி போல் காட்சிகளை கையாண் டிருக்கிறார். காட்டு பகுதிக் குள்ளேயே ரசிகர்களை ஊடுருவச் செய்து யானை களின் நண்பர்களாக்கி விடுகிறார்.
ஷாந்தனு மொய்த்ரா இசை ஒரே. ரசூல் பூக்குட்டி ஒலிப் பதிவு காதுகளுக்குள் சில்வண்டுகள் ரீங்காரமிடு கின்றன.
காடன் – இயற்கையின் நண்பன்.

Related posts

மாஸ்டர் (பட விமர்சனம்)

Jai Chandran

சேசிங் (பட விமர்சனம்)

Jai Chandran

தீதும் நன்றும் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend