Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

என்னங்க சார் உங்க சட்டம் ( பட விமர்சனம்)

படம் : என்னங்க சார் உங்க சட்டம்

நடிப்பு: ஆர்.எஸ்.கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகினி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம்

தயாரிப்பு: சுதன் சுந்தரம் மற்றும் ஜி ஜெயராம்

இசை:குணா பாலசுப்ரமணியம்

ஒளிப்பதிவு: அருண் கிருஷ்ணா

இயக்கம்:
பிரபு ஜெயராம்

ரீலீஸ்: சோனி லைவ்

இயக்குனராக வேண்டும் என்று எண்ணம்கொண்ட ஹீரோ தயாரிப் பாளரை சந்தித்து கதை சொல் கிறார். படத்தின் முதல் பாதியில் ஒன்றுக்கு மூன்று பெண்களை காதலித்து காதல் தோல்வி அடை கிறார் ஹீரோ. படத்தின் 2ம் பாதியில்தான் எல்லா சர்ச்சை களும் ஆரம்பிக்கிறது. நேரடியாகவே பிராமண வகுப்பு பிற வகுப்பினருக்கும் இடையே ஏற்படும் இட ஒதுக்கீடு சிக்கல், வேலை வாய்ப்பு சர்ச்சை, கோவிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் பற்றி படம் அலசுகிறது.

ஹீரோ ஆர். எஸ்.கார்த்திக் ஏற்கனவே பீச்சாங்கை படத்தில் நடித்தவர். இப்படத்தில் நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார். முதல் பாதி படத்தில் காதல் மன்மதனாக வலம் வருகிறார்.

3 ஹீரோயின்களை காதலித்து அவர்களை கழற்றி விடும் காட்சிகளில் அசல் மன்மத விளையாட் டுக்கள் நடத்துகிறார் கார்த்திக்.

படத்தின் 2 பாதி முற்றிலும் வேறு கதை அமைப்பாக தொடங்குகிறது. அதையும் கோவில்களில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆகும் பாகம், அரசு வேலைக்காக மேல் மட்டம், கீழ்மட்ட போராட்டமாக களம் அமைத்திருக்கிறார் இயக்குனர். முதல்பகுதியில் நடித்த கலைஞர்களே இரண்டாம் பாகத்தில் வேறு வேறு பாத்திரங்கள் ஏற்றிருக்கின்றனர்.
ரோகிணி முக்கிய பாத்திரத்தில் 2ம் பாக கதையை தோளில் சுமந்திருக் கிறார்.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கும ஆதரவாக பேசும் இயக்குனர் பிறசாதியினருக்கும் ஆதரவு காட்சிகள் அமைத்து ஒரு தெளிவான முடிவை சொல்லாமல் குழப்பி இருக்கிறார் இயக்குனர் பிரபு ஜெயராம்.

3 ஹீரோயின்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துவிட்டு செல்கின்றனர். மற்ற பாத்திரத்தில் நடித்திருப்ப வர்கள் அந்தந்த பாத்திரங்கவே வாழ்ந்திருக் கிறார்கள்.

ஒளிப்பதிவும், இசையும் காட்சிகளை மனதோடு ஒன்ற வைக்கிறது.

என்னங்க சார் உங்க சட்டம்- விவாத மேடைக்கு உகந்தது.

Related posts

SooraraiPottru bags Best Actor for Suriya & Best Film awards

Jai Chandran

Madras HC rules in 2D Entertainment’s favour

Jai Chandran

எழில் இயக்கத்தில் 2 தலைமுறை ஹீரோக்கள் இணைகின்றனர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend