அயோத்தியில் ராமர் கோவில்: மோடி அடிக்கல் நாட்டினார..
கம்பராமாயணம் பேசி புகழாரம்..
அயோத்தி ஆகஸ்ட் 5:+
ஸ்ரீராமபிரான் பிறந்த அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்துவந்தது. சர்ச்சை குரிய இடமாக இ ருந்து அந்த இடம் பற்றி சுப்ரீம் கோர்ட்டில் பல வருடமாக வழக்கு நடந்து வந்தது விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ். எஸ். போன்ற அமைப்புகள் நீண்ட காலமாக 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில்கட்ட முயற்சிகள் நடந்து வந்தன. வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் சென்ற 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் தீர்ப்பு வந்தது.
சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்ததுடன் இதற்காக அறக்கட்டளை அமைக்க அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி ‘ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவியது. கோவில் கட்டுவதற்கு இருந்த் தடைகள் நீங்கியதையடுத்து ராமஜென்மபூமியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின் றன.
இன்று ராமர் கோவிலுக் கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் விழா நடந்தது.ராமர் கோவில் பூமி பூஜைக்கான சடங்குகள் ராமஜென்ம பூமியில் 2 நாட்களாக நடந்து வருகிறது. ராமர் கோவிலுக் கான பூமி பூஜையொட்டி அயோத்தி விழாக்கோலம் பூண்டு இருந்தது புராண புத்தகங்களில் படித்ததை போன்று அயோத்தி வாழ் மக்கள் விழாவை கொண்டாடி வருகின்றனர். வீடுகளில் அகல் விளக் கேற்றியும், வண்ண விளக்கு களை கட்டிடங்கள் மீது பரப்பியும் அலங்கரித் துள்ளனர், விடுகளையும் வாசலையும் தண்ணீர் தெ ளித்து சுத்தமாக்கி வீடு மற்றும் வாசல் முழுவதும் கோலமிட்டிருந்தனர். இனிப்புகள் செய்து படைப்பதுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்திருக் கின்றனர்.
அழகிய ராமர் படங்களை சுவர்களில் வரைந்திருப்ப துடன் சரயு நதிக்கரை, நகர வீதிகள், ராமஜென்மபூமி சுற்றுவட்டாரங்கள் என மாவட்டம் முழுவதும் ராமா யண காட்சிகள் ஒளிபரப் பட்டு வருகின்றன
இன்று காலையில் டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி அயோத்தி சென்ற டைந்து ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது :
சரித்திர புகழ் பெற்ற இந் நிகழ்வில் எனக்கு வாய்ப்பளித்தற்கு நன்றி. அயோத்திக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது.
ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற மக்களின் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. கோடான கோடி மக்கள் விருப்பத்தை நிறை வேற்றும் வகையில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. நம் கலாசார சமகால அடை யாளமாக ராமர் கோவில் விளங்கும்.
ராமர் கோவில் கட்ட வேண் டும் என்பதற்காக லட்சக் கணக்கான இந்திய மக்கள் களத்தில் இறங்கி போராடி னரகள் அதன் காரணமாக ராமர் கோவில் கனவு நனவா கியுள்ளது .
நீண்ட காலமாக டெண்டிலி ருந்த கடவுள் ராமருக்கு ஒரு பெரிய கோயில் கட்டப்படு கிறது. அன்பு மற்றும் அர்ப்பணிப்புகளை நமக்கு உணர்த்துவதாக ராமர் கோவில் இருக்கும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு ராமர் கோவிலும் உதாரணமாக திகழும்.
ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
தமிழில் கம்பராமாயணம் ராமரின் புகழை பறைசாற்று கிறது. கம்போடியா, மலேசிய மொழிகளில் கூட ராமாய ணம் உள்ளது. பல்வேறு நாடுகளிலும் ராமர் வழிபடப் பட்டு வருகிறார்.
தாய்லாந்து, லாவோஸ் போன்ற நாடுகளிலும் ராமர் வழிபாடு உள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக் கான மக்கள் இன்று மகிழ்ச் சியாக உள்ளனர். ராம ராஜ்ஜியத்தில் வேறுபா டுகள் இல்லை,
இவ்வாறு மோடி பேசினார்.
Modi Laid Foundation Stone to Ram Templ
Ayothi Ramar Temple Celebration, Prime Minister Modi,
ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி,