அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில், டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வந்தார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பு விழா நெருங்க நெருங்க டிரம்பின் ஆதராவாளர்கள் பதற்றம் அடைந்தனர். அவர் நூற்றுக்கணக்கில் திரண்டு வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு தாக்தல் நடத்த தொடங்கினர். இந்த கலவரத்தை அமெரிக்க பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸார் இணைந்து அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 4 பேர் பலியாகினார்கள்.
அமெரிக்காவின் 46வது அதிபராக (ஜனாதிபதியாக) ஜோ பைடன் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்றார். தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற அதிபர் ஜனவரி 20ல் பதவி ஏற்பது மரபாக பின்பற்றப் படுகிறது. அதன்படி, தலைநகர் வாஷிங்டனில் நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கு பகுதியில் புதிய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழா, நேற்று அமெரிக்க நேரப்படி காலை சுமார் 11 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி நேற்றிரவு 9.30 மணி தொடங்கியது. ஜோ பைடன் குடும்பத்தினருக்கு மிகவும் தெரிந்த ஏசு சபை போதகர் லியோ ஜெரேமியா ஓ டொனோவன் பிரார்த்த னையுடன் பதவி ஏற்பு விழா தொடங்கியது.
பின்னர் அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், ஜோ பைடன் 127 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட குடும்ப பைபிளை அவரது மனைவி ஜில் பைடன் கையில் பிடித்திருக்க, அதன் மீது கைவைத்து சத்திய பிரமாணம் செய்து பதவி ஏற்றார்.
அமெரிக்காவின் 49-வது துணை ஜனாதிபதியாக தேர்வான கமலா ஹாரிசுக்கு, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சோனியா சோட்டாமேயர் பதவிப்பி ரமாணம் செய்து வைத்தார்.
கமலா ஹாரிஸ், தனது குடும்ப நண்பரான ரெஜினா ஷெல்டன் மற்றும் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் முதல் ஆப்பிரிக்க வம்சாவளி நீதிபதி துர்கூட் மார்ஷல் ஆகியோருக்கு சொந்தமான 2 பைபிள்களின் பேரில் மீது கைவைத்து பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
துணை ஜனாதிபதியாக ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான பெண் தலைவர் கமலா ஹாரிஸ் (56) தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ட்ரம்ப் ஆதரவா ளர்கள் கலவரத்தில் ஈடுபட்ட தால் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக 25 ஆயிரம் தேசிய பாதுகாப்பு படையி னரின் நாடாளுமன்ற வளாகத் தை சுற்றி பாதுகாப் பில் ஈடுபட்டனர்.
கோலாகலமாக் நடந்த இவ்விழாவில் முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பதவி ஏற்பு விழாவில் அமெரிக்கா பிரபல பாடகி லேடி காகா என்று அழைக்கப் படுகிற ஸ்டெபானி ஜோன் ஏஞ்சலினா ஜெர்மனோட்டா அந்நாட்டின் தேசிய கீதம் பாடினார்.
ஜோ பைடன் பதவி ஏற்பு விழாவில் ட்ரம்ப் கலந்துக் கொள்ளாமல் புறக்கணித்தார். முதல்நாளே வாஷிங் டனில் இருந்து சொந்த ஊரான புளோரிடாவுக்கு புறப்பட்டு சென்றார்.
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடனுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ’அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற் றுள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்துக்கள். இந்தியா-அமெரிக்கா இடையிலான கூட்டாட்சியை மேம்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்’ என கூறி உள்ளார்.