அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் முதல் முறையாக அரசு ஆவணங்களில் கையெழுத்திட்டார். காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந் தத்தில் மீண்டும் இணைவது உள்ளிட்ட சில உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார்.
ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், “நெருக்கடியை சந்திக்கும் இந்த தருணத்தில் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனவே, ஜனாதிபதி அலுவலகமான ஓவல் அலுவலகம் செல்கி றேன். அமெரிக்க மக்களுக்கு நிவாரணம் அளிப் பதற்கான நடவடிக்கைகளை தொடங்க உள்ளேன்” என்றார்.
முன்னதாக பதவி ஏற்பு விழாவில் ஜோ பைடன் தனது முதல் உரையில் கூறிய தாவது:-
அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. அமெரிக்க மக்கள் தங்களின் கடமை அறிந்து செயல்பட வேண்டும். நமக்கும், நமது குழந்தை களுக்குமான சிறந்த உலகத்தை உருவாக்குவோம். பல அழுத்தங்களை கடந்து மக்களாட்சி மலர்ந்துள்ளது. ஒட்டுமொத்த மக்களுக்கான ஜனாதிபதியாக நான் இருப்பேன். கொரோனாவை வென்று மீள்வோம். அமெரிக் காவையும், அமெரிக்க ராணுவத்தைவும் கடவுள் காக்கட்டும். பயங்கரவாதம் முடிவுக்கு வர வேண்டும். பெருந்தொற்று, வறுமை ஒழிய அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என்று அவர் உரையில் கூறினார்.