Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஜென்ம நட்சத்திரம் (பட விமர்சனம்)

படம்: ஜென்ம நட்சத்திரம்

நடிப்பு: தமன் ஆகாஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்திரேயா ராகேஷ் ஷெரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிகாஷாந்த் வேல ராமமூர்த்தி,  தலைவாசல் விஜய், சந்தான பாரதி நக்கலேட்ஸ் நிவேதா, யாசர்

தயாரிப்பு: சுபாஷினி கே

இசை: சஞ்சய் மாணிக்கம்

ஒளிப்பதிவு: கே  ஜி

இயக்கம்; பி. மணிவர்மன்

பிஆர் ஓ: சுரேஷ் சந்திரா, நாசர்

30 வருடங்களுக்கு முன்பு ஓமன் என்ற ஹாலிவுட் திகில் படம் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு நடுங்க வைக்கும்  பயத்தை தந்தாலும் பெரும் வரவேற்பு பெற்று சூப்பர்  ஹிட்டாக ஓடியது. அதைத் தழுவி ஏராளமான படங்கள் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வந்து வெற்றியும் பெற்றது. நீண்ட வருடங்களுக்கு பிறகு அதே பாணியில் வந்திருக்கிறது ஜென்ம நட்சத்திரம்.

கதை: தமன் உதவி இயக்குனர். பட வாய்ப்புக்காக தயாரிப்பாளரை தேடி அலைந்துக் கொண்டிருக்கிறார். அவரது மனைவிக்கு அமானுஷ்ய சம்பவங்கள் கனவில் வருகிறது. இந்த நிலையில் 58 கோடி ரூபாய் ஒரு பாழடைந்த பங்களாவில் இருப்பதாக தகவல் கிடைக்கிறது. அந்தப் பணத்தை எடுப்பதற்காக தமன் அவரது மனைவி மற்றும் நண்பர்கள் குழு பாழடைந்த பங்களாவுக்கு செல்கிறது. அங்கு ஒவ்வொரும் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர். இந்த கொலைகள்  எப்படி நடக்கின்றன, அதிலிருந்து இவர்கள் தப்ப முடிந்ததா என்பதற்கு படபடப்புடன் பதில் அளிக்கிறது ஜென்ம நட்சத்திரம்

சமீப காலமாக பேய் படங்கள் என்றாலே அது காமெடி பேய் படமாக தான் வந்து கொண்டிருக்கிறது பேய் மீது இருந்த பயம் கூட போய்விட்டது. ஆனால் மீண்டும் ஒரு பேய் பயத்தை தரும் படமாக ஜென்ம நட்சத்திரம்  உருவாகி இருக்கிறது.

பேய் பங்களாவுக்குள் தமன் மற்றும் நண்பர்கள் நுழைந்த பிறகு ஒவ்வொரு  சீனிலும் ஒரு பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கணக்கில் கொலை சம்பவங்கள் நடக்கிறது. இந்த கொலைகள் எப்படி நடக்கிறது என்பதை சஸ்பென்சாக வைப்பதற்காக சாத்தான் பூஜை, சாத்தான் நாய் என்று வெவ்வேறு காட்சிகள் அமைத்து சஸ்பென்ஸ் மெயின்டன் செய்திருப்பது ஆர்வத்தை தூண்டுகிறது.

தமன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படி ஒரு  கதையில் அவர்  நடிப்பது முதல்முறை என்று தெரிகிறது. பேய் படமாக இருந்தாலும் ஆக்சன் படமாக இருந்தாலும் தமன் ஏன் தான் இப்படி நடிப்பில் அடக்கி வாசிக்கிறாரோ தெரியவில்லை. பல காட்சிகளில் அவர் ஸ்கோர் செய்யாமல் விட்டிருக்கிறார்.

கிளைமாக்சில் ஒரு ஆக்சன் காட்சியில் தமன் வேகம் காடியிருப்பது  ஆறுதல். தமன் தனது கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தினாலும் உடல் மொழி மற்றும் மாறுபட்ட ஹேர் ஸ்டைல் என்று தனது தோற்றத்தில் வித்தியாசம் காட்டுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

மால்வி மல்ஹோத்ரா எல்லா நேரத்திலும் பயந்து கொண்டிருப்பது ஓவர் ஆக்டிங்கோ என்று  என் எண்ண வைக்கிறது. அழுவது கதறுவது அலறுவது என்றுதான் அவரது கேரக்டர் செல்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் படத்திற்கு துணை நிற்கிறது.

ட்ரிபிள் சிக்ஸ் ( 666) சிம்பிள் காட்டுவது, சாத்தான் பூஜை இடங்கள் காட்டுவது, சாத்தான் நாய், சாத்தான் குழந்தை என்று திகிலூட்டுவதற்காக கையாளப்பட்டிருக்கும் டெக்னிக்கில் இன்னும் கூட திரில் கூட்டி இருக்கலாம்.

மேலும் மைத்திரேயா ராகேஷ் ஷெரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஷாந்த் வேலா ராமமூர்த்தி,  தலைவாசல் விஜய், சந்தான பாரதி நக்கிலேட்ஸ் நிவேதா, யாசர்  ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

படத்தை சுபாஷினி  தயாரித்திருக்கிறார்

சஞ்சய் மாணிக்கம் இசை காட்சிகளுக்கு விறுவிறுப்பை சேர்த்திருக்கிறது

கே  ஜி ஒளிப்பதிவு  ஓ கே

இயக்குனர் பி. மணிவர்மன்  திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தாலும் அதை விறுவிறுப்பாக்குவதற்கு இன்னும் என்ன செய்திருக்கலாம் என்பதையும் யோசித்திருக்கலாம்.

ஜென்ம நட்சத்திரம் – பாதி கிணறு தாண்டுகிறது.

By

ஜெயச்சந்திரன் கே

www.Trendingcinemasnow.com

 

 

 

 

 

 

Related posts

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் யோகிபாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்

Jai Chandran

சமுத்திரக்கனிக்கு, என் சென்னை யங் சென்னை’ விருதுகள்!

Jai Chandran

3:33 Horer Movie Experiences Shared by Hero Sandy Master

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend