Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

நடிகர் ஜெய் மிகவும் கலகலப்பான நபர் – “ட்ரிப்ள்ஸ்” நடிகர் ராஜ்குமார் !

திரை உலகில் மிக குறுகிய காலத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி மிகச்சிறந்த நடிகர் எனும் பெயரை பெற்றிருக்கிறார் நடிகர் ராஜ்குமார். அவரது அசத்தலான நடிப்பை அடுத்ததாக Hotstar Specials வழங்கும் “ட்ரிப்ள்ஸ்” இணையத் தொடரில் காணலாம்.

இது குறித்து நடிகர் ராஜ்குமார் கூறியதாவது…
எனக்கு கிடைக்கும் பாரட்டுக்கள் அனைத்தும், சரியான கதாப்பத்திரத்தில் என்னை தேர்வு செய்து நடிக்க வைத்த இயக்குநர்களையே சாரும். Hotstar Specials வழங்கும் “ட்ரிப்ள்ஸ்” இணையத்தொடரில் இயக்குநர் சாருகேஷ் எனக்கு வழங்கிய பாத்திரம் வாழ்நாளில் மறக்கமுடியாத அற்புதமான பாத்திரமாகும். என்னை இக்கதாப்பாத்திரத்திற்காக தேர்ந்தெடுத்த இயக்குநர் சாருகேஷ் அவர்களுக்கும் அற்புதமான எழுத்தை தந்திருக்கும் பாலாஜி ஜெயராமன் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். நான் ஏற்கனவே நடிகர் ஜெய்யுடன் திரைப்படத்தில் பணிபுரிந்துள்ளேன். எளிமையாக, நட்போடு பழகும் அவரது இயல்பு, துளியளவும் மாறவில்லை. கலகலப்பு மிகுந்த மனிதரான ஜெய்யுடன் வேலை செய்வது மிகவும் இனிமையாக இருந்தது.

பெரும்பாலான படங்களில் அவர் தனது நெருங்கிய நண்பன் செய்யும் குளறுபடியால் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். “ட்ரிப்ள்ஸ்” தொடரில் எப்படி என்று தெரியுமா? உங்களால் யூகிக்க முடிகிறதா? ஆம் இந்த தொடரில் சிக்கலை ஏற்படுத்தும் முக்கிய நண்பனாக நான் தான் நடித்துள்ளேன். கதையின் மையத்தில் திருப்பத்தை உண்டாக்குவது எனது பாத்திரமே!. நிறைய சொல்லி விட்டால் சுவாரஸ்யங்கள் போய்விடும். ரசிகர்கள் டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் அற்புதமான காமெடி கலாட்டாவை அனுபவிப்பார்கள் என்பது உறுதி. இயக்குநர் சாருக்கேஷ் சேகர் இயக்கியுள்ள இத்தொடரை Stone Bench Films சார்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் Disney Hotstar VIP தளத்திற்காக தயாரித்துள்ளார். “ட்ரிப்ள்ஸ்” தொடர் மூன்று நண்பர்களின் காமிக்கல் தருணங்களை, மறக்கவியலா சாகசங்களை, அவர்களின் காதலை, காபி ஷாப்புக்காக போராடும் வாழ்வை கூறியுள்ளது. இந்த காதல்-காமெடித் தொடரில், ஜெய் , வாணி போஜன் , ராஜ்குமார், மாதுரி மற்றும் விவேக் ப்ரசன்னா முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related posts

சிலம்பம் நூல் வெளியீடு – விளையாட்டு பட்டைகள்

Jai Chandran

பொன்னியின் செல்வன் நாவலை சிக்கல் இல்லாமல் படமாக்கிய மணிரத்னம்: ,நடிகர் கார்த்தி பேச்சு

Jai Chandran

SJ Suryah’s Special Birthday Glimpse

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend