Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

8 ஆண்டுக்கு பிறகு பிரியாமணி தமிழில்  நடிக்கும் “கொட்டேஷன் கேங்” 

வெகு சில படங்களே படப்பிடிப்புக்கு முன்னரே நம் எதிர்பார்ப்பை தூண்டும் படமாக ஆர்வத்தை அதிகரிக்கும் படைப்பாக இருக்கும். அந்த வகையில் “கொட்டேஷன் கேங்” திரைப்படம் துவங்குவதற்கு முன்னதாகவே தரமான படைப்பு என பெயர் பெற்றுள்ளது. தேசிய விருது நாயகி ப்ரியாமணி மற்றும் பேபி சாரா படத்தின் முன்னனி கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் இப்படத்தை இயக்குநர் விவேக் இயக்குகிறார். மேலும் ஃபிலிமினாடி எண்டர்டெயின்மெண்ட் (Filminaty Entertainment) சார்பில் காயத்திரி சுரேஷ், ஶ்ரீ குரு ஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் G. விவேகானந்தன் உடன் இணைந்து இந்த “கொட்டேஷன் கேங்” திரைப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார் இயக்குநர் விவேக். இப்படத்தின் படப்பிடிப்பு 2020 டிசம்பர் 5 அன்று மிகப்பிரமாண்டமான விழாவுடன் மும்பையில் துவக்கப்பட்டது. இப்படம் ஒரே நேரத்தில் ஐந்து இந்திய மொழிகளில் மும்பை, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் மிக முக்கிய பகுதிகளில் படமாக்கப்படுகிறது.

இப்படத்தில் ரெட் ரெய்ன் புகழ் விஷ்ணு வாரியர், Zee ஜி புகழ் அக்‌ஷயா, கியாரா, சோனல், கேதன் கராந்தே, சதீந்தர் மற்றும் ஷெரீன் ஆகிய இளம் திறமைகள் இணைந்து நடிக்கவுள்ளனர்.

படத்தின் இயக்குநர் விவேக் படம் குறித்து கூறும்போது… இப்படம் அனைத்திந்திய ரசிகர்களுக்கு கதை சொல்லலிலும், தொழிற்நுட்ப வடிவிலும் புதிய அனுபவமாக, தரமான படைப்பாக இருக்கும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் மிக விரைவில் வெளியிடவுள்ளனர்.

சாருலதா படத்தில் கடைசியாக தமிழில் பிரியாமணி நடித்தார் அதன்பிறகு எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கொடேஷன் கேங் படத்தில்  நடிக்கிறார்.

Related posts

டாக்டராக நடிக்க லெக் பீஸில் தையல் போட்டு பழகிய “சல்லியர்கள்” நாயகி

Jai Chandran

அருள்வான் (பட விமர்சனம் )

Jai Chandran

Prime Video held a special screening of Engga Hostel

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend