கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் கேங்ஸ்டர் படம் ஜகமே தந்திரம். இப்படம் கடந்த 2020ம் ஆண்டே திரைக்கு வரவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் படம் தள்ளி வைக்கப்பட்டது.
தியேட்டர்கள் திறந்த பிறகும் ஜகமே தந்திரம் படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டது. படத்தை தியேட்டரில் வெளியி டுவதா? ஒ டிடியில் வெளியிடுவதா? என்ற குழப்பம் நிலவியது. தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் இருவருமே படத்தை தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் இறுதியில் ஜகமே தந்திரம் படம் ஒ டிடி யில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி வரும் ஜூன் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் இந்தியாவில் வெளியாக விருப்பதாக பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.