படம்: ஜகமே தந்திரம்
நடிப்பு: தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ், கலையரசன், சவுந்தரரஜன்,
தீபக் பரமேஷ், ஷரத் ரவி, தேவன், வடிவுக்கரசி, ராமசந்திரன் தன்ராஜ், தயாரிப்பு: சசிகாந்த், சக்ர்வர்த்தி, ராமசந்திரா
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா
இயக்கம்: கார்த்திக் சுப்பராஜ்
ரிலீஸ்: நெட்பிளிக்ஸ் ஒ டி டி தளம்
மதுரையில், பரோட்டா கடை நடத்தும் தனுஷ் அவ்வப்போது சில சட்டவிரோத செயலில் ஈடுபடுகிறார். ஒரு கொலையும் செய்கிறார். அவரை போலீஸ் தேடும் நிலை உருவாகும் நிலையில் லண்டனில் டான் ஒருவருக்கு உதவியாக வேலை பார்க்க பெரிய சம்பளத்துடன் அழைப்பு வருகிறது. அதற்கு சம்மதித்து லண்டன் செல்கிறார் தனுஷ். பீட்டர் என்கிற வெள்ளைக்கார தாதாவிடம் சேர்க்கிறார். தனக்கு எதிராக இருக்கும் மற்றொரு ரவுடி சிவதாஸை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்ட சொல்கிறார் பீட்டர். தனுஷும் அதற்கு ஸ்கெட்ச் போட்டுத் தருகிறார். சிவதாஸை பீட்டர் கொல்கிறார். அதற்கு பரிசாக லண்டனிலேயே பெரிய பரோட்டா கடை வைத்து தருகிறார் பீட்டர். இதற்கிடையில் பாடகி ஐஸ்வர்யா லட்சுமி மீது காதல் கொள்கிறார் தனுஷ். காதலியாக பழகும் அவர் தனுஷை தீர்த்துக்கட்ட முயல்கிறார். அதை கண்டுபிடிக்கும் தனுஷ் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்கிறார். இலங்கையி லிருந்து தப்பித்து லண்டன் வந்த தமிழர்கள் பலர் சிறையில் இருக்கிறார்கள் அவர்களை காப்பாற்றி வெளியில் கொண்டு வர ஏற்பாடு செய்துவந்த சிவதாளை கொன்றதால் பழி வாங்கு வதாக கூறுகிறார். அப்போதுதான் தனுஷுக்கு தான் செய்த தவறு புரிகிறது. சிவதாஸ் இடத்திலிருந்து தானே சிறையில் இருக்கும் தமிழர்களை மீட்டு தருவதாக தனுஷ் உறுதி அளிக்கிறார். அவரால் அது முடிந்ததா என்பதற்கு ஜகமே தந்திரம் பதில் சொல்கிறது.
தனுஷ் படங்களில் இதுவொரு மாறுபட்ட கேங்ஸ்டர் படம். சுருளி என்ற கதாபாத் திரத்தில் ஜமாய்த்திருக்கிறார். ஹீரோயிச மெல்லாம் கிடையாது எல்லாமே வில்லனிசம் பாணி நடிப்புத்தான்.
லண்டன் தாதாவாக வரும் ஜேம்ஸ் காஸ்மோவிடம் சேரும் தனுஷ் அவருக்கு விஸ்வாசமாக வேலை செய்கிறார். எதிரி சிவதாசாக நடித்திருக்கும் ஜிஜோ ஜார்ஜ்ஜிடம் சிக்கிக்கொள்ளும் தனுஷ் அவரிடம் சாமர்த்தியமாக பேசி வெள்ளைக்காரனுக்கு வேலை செய்யறதவிட உங்கிட்ட வேலை செய்துவிட்டு போகிறேன் என்று நம்பும்படி பேசிவிட்டு பிறகு அவரை கொல்ல வெள்ளைக்கார தாதாவிடம் அரிவாளை எடுத்துக்கொடுக்கும்போது அசல் வில்லத்தனத்தை வெளிப்படுத்து கிறார் தனுஷ்.
ஐஸ்வர்யா லட்சிமியை கண்டதும் காதல் கொள்ளும் தனுஷ் அவரை பார்த்த சில நொடிகளிலேயே ஐ லவ் யூ செல்வதும் திருமணம் செய்துக்கொள்ளலாமா என்று கேட்பதும் அதற்கு ஐஸ்வர்யா ஒகே சொல்வதும் ஒரே மாஜிக்காக உள்ளது.
வெள்ளைக்கார தாதா ஜேம்ஸ் காஸ்மோவை மதுரையில் கையெறி குண்டு வீசி எதிரிகளை விரட்டி பிடிப்பதுபோல் தனுஷ் போடும் ஸ்கெட்ஸ் சூப்பர்.
ஒரே குண்டில் கதையை முடிப்பார் என்று பார்த்தால் ஜேம்ஸ் காஸ்மோவை லண்டனிலிருந்து தூர இடத்துக்கு கடத்தி வந்து எந்தவித நாட்டுக்கான குடிமகன் அடையாளம் இல்லாமல் தனியாக தவிக்கவிட்டு செல்வது எதிர்பாராத கிளைமாக்ஸ்.
கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி பாட்டுக்கு மட்டும் வந்து செல்லாமல் கதையுடன் ஒரு கதாபாத்திரமாக பயணித்து கவர்கிறார்.
ஜோஜு தாமஸ், கலையரசன், வடிவுக்கரசி ஆகியோரின் பங்களிப்பும் நிறைவு. ஷ்ரத் ரவி வில்லனிடம் வேலை பார்க்கும் மொழி பெயர்ப்பாளராக சில சமயங்களில் காமெடி செய்கிறார்.
ஒளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா லண்டனையும், ஈழ தமிழர்கள் அவதியையும் படம்பிடித்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் ரகிட ரகிட பாடல் தாளம் போட வைக்கிறது.
ஜகமே தந்திரம்- ஆக்ஷன் கேங் வார்