படம்: இறுகப்பற்று
நடிப்பு: விக்ரம்.பிரபு, விதார்த், , ஶ்ரீ, அபர்ணதி, சானியா அய்யப்பன்
தயாரிப்பு: எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பி. கோபிநாத்
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு: கோகுல் பெனாய்
இயக்கம்: யுவராஜ் தயாளன்
மூன்று தம்பதிகளுக்கிடையே நடக்கும் வாழ்க்கை பயணம் எப்படி கடலில் கப்பல் கவிழ்கிறது என்பதை சொல்ல முயன்று அதில் கரை சேர முடியாமல் திணறியிருக் கிற குழப்பமான கதைதான் இறுகப்பற்று.
ஐடி கம்பெனிக்கு செல்லும் விதார்த் தன் மனைவி குண்டாக இருப்பதால் அவரை வெறுக் கிறார். காதலித்து திருமணம் செய்தமனைவி தன்னைவிட புத்திசாலியாக இருக்கிறார் என்பதற்காக ஈகோ காட்டும் ஶ்ரீ, மனைவியிடம் எப்படி அட்ஜெஸ்ட் செய்து வாழ வேண்டும் என்று ஆலோசனை தரும் டாக்டர் தன் கணவரை எப்படி சோதனை எலியாக பயன்படுத்துகிறார் என்பதை சொல்லும்.கதை என கோனார் தமிழ் உரையை மூன்று பாகமாக பிரித்துபோல் ஒரு ஸ்கிரிப்ட்.
இதில் நடித்திருக்கும் எல்லோருமே நடிப்பைத்தான் வெளிப்படுத்தி யிருக்கிறார்களே தவிர ஒருவரும் கதாபாத்திரத்தோடு ஒன்றிப் போகவில்லை. மனைவி குண்டாக இருக்கிறார் என்பதற்காக டைவர்ஸ் கேட்கும் கணவரை வெளிநாட்டில் வேண்டுமென்றால் பார்க்கலாம் நம் ஊரில் அப்படி கேள்விப்பட்டதில்லை,
மனைவி கவுன்சிலர் பதவியில் இருந்தால்கூட அதை கொண் டாடும்.கணவர்தான் நிஜத்தில் இருக்கிறார் அதற்காக அவர் மீது ஈகோ காட்டும் கணவர், அதற்காக ஒரு டைவரஸ் கேட்ட சம்பவமும் கேள்விப்பட்டதில்லை .
டாக்டர் மனைவி ஷ்ரத்தா கணவர் விக்ரம் பிரபுவுடன் குடும்பம் எங்கே நடத்தினார் அவர்களுக்குள் ஈடுபாடு வருவதற்கு .
விக்ரம்.பிரபு அதற்குமேல், .கையில் ஒரு பையுடன் அயர்ன் பண்ண சட்டைபோல் உடல் மொழி எதுவும் இல்லாமல் வருகிறார். உணர்ச்சி களை வெளிப்படுத்தாமல் கோபம் வந்ததுபோல் நடிக்கிறார். நடிகர் திலகம் வாரிசு என்று சொல்ல இப்போதைக்கு இவர் ஒருவர் இருக்கிறார் அது பெயரளவில் மட்டும் என்று இருந்து விடக் கூடாது. தாத்தா நடித்த அந்தக் கால படங்களை இவர் நிறைய பார்க்க வேண்டும்.
குடும்பம் ஒரு கதம்பம் படத் தில்.விசு ஒரு வசனம் பேசுவார் “பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற வைத்தியருக்கே பைத்தியம் பிடிச்சிட்டா அந்த பைத்தியக்கார வைத்தியருக்கு எந்த பைத்தியக்கார வைத்தியர். வைத்தியம் பார்ப்பார்” என்று அந்த வசனம் போகும் அந்த கதையாகத்தான் விக்ரம்பிரபு, ஷ்ரத்தா ஜோடி கதை உள்ளது.
3 ஹீரோக்களில் ஶ்ரீ ஓரளவுக்கு பாத்திரத்தோடு ஒன்ற முயன்றிருக் கிறார். இவர் தனது ஒற்றை பெயரை மாற்றிக்கொண்டால் அதிர்ஷ்டம் அடிக்குமோ என்னமோ?
டாக்டர் சொன்ன பிறகு மனைவி மீது அன்பு காட்டும் விதார்த் இறு திக் காட்சியில் மனைவியை என்கரேஜ் செய்வதாக நினைத்து ஓவராக நடித்து கடுப்படிக்கிறார்.
தொடக்க காட்சியையே ஆஸ்பத் திரியில் அட்வைஸ் கேட்கும் உணர்வை இயக்குனர் தவிர்த்தி ருக்கலாம். அவசரமாக வந்த வாய்ப்புக்காக அவசரமாக ஒரு கதையை எழுதியதற்கு பதிலாக ஆற அமர்ந்து உண்மை உணர்வு களை பிரதிபலித்ததிருந்தால் அடித்தட்டு மக்களின் உணர்வு களும் வெளிப்பட்டிருக்கும்
கதையை கவனித்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களும் இதில் அவசரத்தை காட்டியிருக்கி றார்கள்.
இறுகப்பற்று – எல்லோருக்குமான தல்ல. அப்படி இப்படி என்று வாழும் ஜோடியைக் கூட கும்மியடிக்க வைத்து விடும்..

