படம்: எனக்கு எண்டு கிடையாது
நடிப்பு: விக்ரம் ரமேஷ், ஸ்வயம் சித்தா, சிவகுமார் ராஜு, கார்த்திக் வெங்கட் ராமன்
தயாரிப்பு: கார்த்திக் வெங்கட் ராமன்
இசை: கலா சரண்
ஒளிப்பதிவு: தளபதி ரத்னம்
இயக்கம்: விக்ரம் ரமேஷ்
பி ஆர் ஓ: A ஜான்
வடிவேலு சொன்ன வசனத்தை வைத்து பல படங்கள் வந்து விட்டது. கிட்டத்தட்ட எல்லா படமுமே பார்க்கும் படியும் ரசிக்கும் படியுமாகவே இருந்தது. அந்த பட்டியலில் இந்த படத்தையும் சேர்த்து விடலாம்.
கால் டாக்சி டிரைவர் லேடி ஒருவரை பிக்கப் செய்துக் கொண்டு அவர் வீட்டில் விட வருகிறார். மெதுவாக இருவரும் பேச்சு கொடுத்து திடீர் பிக்கப் ஆகின்றனர். பங்களா வீட்டுக்குள் டிரைவரை அழைத்துச் செல்கிறார் லேடி. குதிரை கணைக்கிறது இருவரும் மயங்கி விழுகின்றனர். அடுத்து திருடன் ஒருவன் என்ட்ரி தருகிறான். பின்னாலேயே பண மூட்டையுடன் அரசியல்வாதி வருகிறார். எல்லோரும் வீட்டுக்குள் வந்த பிறகு டோர் லாக் ஆகி யாரும் வெளியில் செல்ல முடியாமல் சிக்கிக் கொள்கின்றனர். இந்த நிலையில் லேடி இறந்துவிட இன்னொரு பிணமும் உள்ளே இருப்பதை அறிந்து டிரைவர், திருடன், அரசியல்வாதி மூவரும் அதிர்கின்றனர் . கதவை உடைத்தால் ஆட்டோமேட்டிக் லாக்கால் போலீசில் சிக்கு வார்கள். தப்பிக்கவும் வேறு வழியில்லாமல் தவிக்கிறார்கள் . இந்நிலையில் பிணமாக இருந்த ஒருவர் கையில் துப்பாக்கியுடன் எழுகிறார் அடுத்து நடப்பது என்ன என்பதை இங்கே சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குறைந்து விடும் .
மொத்தம் 5 கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு ஒரு சுவாரஸ்யமான மிஸ்ட்ரி திரில்லர் கதையை இதைவிட சூப்பராக யாரும் இயக்க முடியுமா என்பது சந்தேகம்தான் இத்தனைக்கும் ஒரே வீட்டுக்குள் தான் 90 சதவீத கதையும் நடக்கிறது.
டிரைவராக வரும் விக்ரம் ரமேஷ்தான் படத்தின் இயக்குனர், அதனால் பாத்திரத்தை சரியாக செய்ய வேண்டும் என்ற உணர்வு உள்ளுக்குள்ளேயே இருக்கிறது. அதுவும் கடைசி சிப் டிரிங்க் அடிக்க ஹீரோயின் ஸ்வயம்சித்தா தரும் அந்த லிப் டு லிப். வாய்ப்பை இயக்குனர் வசமாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மனுஷன் . மச்சக்காரர்தான்.
திருடனாக வரும் கார்த்திக் வெங்கட் ராமன் கொஞ்சம் மிரட்டுகிறார் திடீரென்று காமெடி பீஸாகி கலகலக்க வைக்கிறார்.
எம் எல் ஏவாக வரும் சிவராஜ் குமார் ஏற்கனவே பார்த்த முகம் போல் தெரிந்தாலும் இதில்தான் மனதில் இடம் பிடிக்கிறார் . ஒரு கட்டத்தில் மூன்று களவாணிகளும் சேர்ந்து அடிக்கும்.கூத்து அமர்க்களப்பட வைக்கிறது. வைக்கிறது.
ஒரு சுவாரஸ்யமான படத்துக்கு குறைந்த விமர்சனமே போதும்.தயாரிப்பு, இயக்கம், இசை ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே மனதை கவர்கிறது.
இதற்கு மேல் என்ன பாராட்டு படத்தை பார்த்து விட வேண்டியது தான் என்று முடிவு செய்தாலும் தப்பில்லை.
எனக்கு எந்த கிடையாது – டென்ஷன் ரிலீப்.