*நடிகர்கள் :*
பாரி இளவழகன் – சிருமாமில்ல சீதா கிருஷ்ணா
ரம்யா ரங்கநாதன் – மேஜிக் கோன்சால்வ்ஸ்
சேத்தன் – சிருமாமில்ல ஆதிநாராயண பாஸ்கர்
ரோஜா செல்வமணி- சரளா
பரிதாபங்கள் கோபி – பெங்களூர் பாபா
செல் முருகன் – மங்கபாபு
நிகிலா சங்கர் – தனிஷா
இஸ்மத் பானு – சத்தியவதி
சுதர்சன் காந்தி – சிருமாமில்ல சிரஞ்சீவி சங்கர்
*தொழில்நுட்பக் குழு:*
பேனர்: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் & Era Entertainment
தயாரிப்பு நிறுவனம்: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேஸில் கிரியேஷன்ஸ் & Era Entertainment
தயாரிப்பாளர்கள்: சத்யா கரிகாலன், ஈரா சரவணன் & யுவராஜ் கணேசன
எழுதி, இயக்கி, நிகழ்த்தியவர்: பாரி இளவழகன்
இசை: பரத் சங்கர்
DOP: ஷெல்லி கேலிஸ்ட்
படத்தொகுப்பு : பார்த்தா MA
கலை இயக்குனர்: மகேந்திரன்
இணை தயாரிப்பாளர்: டி நரேன்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள்: ஷாஜன் கவிதா, விவேக் சுவாமிநாதன் ஆர்
நிர்வாக தயாரிப்பாளர்: அஜித்குமார் நடராஜன்
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: குட் நைட் ஆர் நாகராஜன்
தயாரிப்பு நிர்வாகி: எஸ் மணிகண்டன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: பாபா மணி
ஒலி வடிவமைப்பு & கலவை: டி உதய் குமார் (ஒலி அதிர்வு)
ஒலி வடிவமைப்பு: ரஞ்சித் வேணுகோபால், சரவண குமார்
ஆடை வடிவமைப்பாளர்: அபிநந்தினி எம்
தலைமை ஒப்பனை கலைஞர்: F. சசி குமார்
சண்டைக் காட்சி: டான் அசோக்
VFX: RENDERHOOD, ஆனந்தராஜ் ஆர்
டிரெய்லர் AI ஷாட்ஸ்: டிஜிபிரிக்ஸ் என்டர்டெயின்மென்ட்
வண்ணம்: கௌஷிக் கே எஸ் (ஸ்டுடியோ ஸ்பேஸ் மாங்க்)
இணை இயக்குனர்கள்:ராகுல் பாலாஜி, ராகேஷ்
இயக்கும் குழு: கார்த்திக் வீரபாகு, ஐ.ராஜன், தினேஷ், எம்.ராஜன், விஷ்ணு
ஸ்டில்ஸ்: வி பாலாஜி
விளம்பர ஸ்டில்ஸ்: பெனுநந்தா
விளம்பர வடிவமைப்பாளர்: கௌதம் ஜே
படைப்பு விளம்பரங்கள்: வெங்கட் ரமணன், ராஜசேகர்
தலைப்பு வடிவமைப்பு: Yedhu
மக்கள் தொடர்பு : யுவராஜ்
படம்: அன்பே டயானா
நடிப்பு: பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா செல்வமணி, பரிதாபங்கள் கோபி, செல் முருகன், நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி
தயாரிப்பு: சத்யா கரிகாலன், ஈரா சரவணன் & யுவராஜ் கணேசன்
இசை: பரத் சங்கர்
ஒளிப்பதிவு: ஷெல்லி கேலிஸ்ட்
இயக்கம்: பாரி இளவழகன்
பிஆர்ஓ : யுவராஜ்
தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர் கிருஷ்ணா (பாரி இளவழகன் ). இவரது தந்தை ஜாலி டைப் என்றாலும் தாயார் சரளா தனது சாதியில் தான் மகனுக்கு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். இந்நிலையில் கிருஷ்ணா ஆங்கிலோ இந்திய பெண் மேஜிக்கை (ரம்யா ரங்கநாதன்) காதலிக்கிறார். இந்த விவகாரம் சரளாவுக்கு தெரியவர குடும்பமே அதகளம் ஆகிறது. தனது அண்ணன் மகளுக்கு கிருஷ்ணாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இந்த விவகாரம் எங்கு போய் முடிகிறது என்பதுதான் கலாட்டா கிளைமாக்ஸ் ஆக அமைகிறது
ஜமா என்ற தெருக்கூத்து படத்தை இயக்கி நடித்து ஓரளவுக்கு மக்கள் மத்தியில் அறிமுகமானவர்தான் பாரிஇளவழகன்.. தெருக்கூத்து ஆட்டத்திலேயே பெண் வேடம் போட்டு படம் முழுக்க நடித்து அசத்திய பாரி நடிப்பு பற்றி குறை காண்பது கடினம் தான்.
அன்பே டயானா படத்தில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் அவர் அம்மாவுக்கு அடங்கிய பிள்ளையாக நடித்திருக்கிறார் இந்த காலத்தில் இப்படி கூட பிள்ளைகள் இருக்கிறார்களா என்று கேட்கும் அளவுக்கு நல்ல பிள்ளையாக நடித்திருக்கிறார்.
ஆங்கிலோ இந்திய கிறிஸ்துவ பெண்ணாக வரும் ரம்யாவை பாரி இளவடகன் தனது அப்பாவித்தனமான நடவடிக்கைகள் மூலம் கவர்வதும் காதல் கொள்வதும் அந்த காதலை அழகு ரம்யா ஏற்றுக்கொள்வதெல்லாம் நடைமுறை சாத்தியமாக என்று கேட்டால் சாத்தியமாக தான் இருக்கிறது. கருப்பு மாப்பிள்ளை ஒருவருக்கு இங்கிலாந்து சிவப்பு பெண் கிடைப்பது போலத்தான் இந்த காதல் கதை அமைந்திருக்கிறது.
ரம்யாவின் தந்தையை பார்த்து சற்று பயப்படும் பாரி ஒரு கட்டத்தில் அவரை பளார் என்று கன்னத்தில் அறைகிறார். இது எப்படி நடக்கிறது என்று கேட்டால் படத்தில் அது ஒரு குட்டி கதையாக வருகிறது.
இதற்கிடையில் பாரி நிலவு அளவிற்கு ரோஜா தனது அண்ணன் மகளை பார்த்து திருமணம் செய்து வைக்க செய்யும் ஏற்பாடுகள் லேசான பரபரப்பை திறக்கதையில் ஏற்படுத்துகிறது. அதையும் ஒரு டிவிஸ்ட்டாக கிளைமாக்ஸசில் இயக்குனர் மாற்று இருப்பது புத்திசாலித்தனம்.
பரிதாபங்கள் கோபி எப்போது ஒருமுறை படங்களில் நடித்தாலும் தனது பாத்திரத்தை நிற்கும்படி செய்து விடுவார். அந்த வேலையை தான் நீங்களும் செய்து இருக்கிறார். நிறைய படங்களில் இவரை பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
ஆந்திரா அரசியலில் ஈடுபட்டிருக்கும் ரோஜா சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார் தற்போது மீண்டும் அவர் சினிமாவுக்கு வந்திருப்பது ஆரோக்கியமான விஷயம் தான் இளமையான ஒரு அம்மா தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தனது மகன் மகள் கணவன் எல்லோரையுமே தனது கட்டுப்பாட்டில் வைக்கும் அளவுக்கு கோபத்தை வெளிப்படுத்தி அந்த செய்கிறார் ரோஜா. இவரது கணவராக வரும் சேர்தல் ஜாலியாக பேசினாலும் அவ்வப்போது ஒரு குண்டை போட்டு விடுகிறார். செல் முருகன் காமெடிக்கு பயன்பட்டிருக்கிறார்.
சத்யா கரிகாலன், ஈரா சரவணன் & யுவராஜ் கணேசன் படத்தை தயாரித்திருக்கின்றனர்.
பரத் சங்கர் இசை போதுமானதாக இருக்கிறது. ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு எதார்த்தம்
பாரி இளவழகன்
