மாற்றுத்திறனாளிகளுக்காக துபாய் நாட்டில் நடைபெற்ற DPL போட்டிக்கு செல்ல தமிழகத்தைச் சேர்ந்த சென்னை ஸ்டார்ஸ் அணியின் 18 வீரர்கள் உதவி கேட்டு கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை 31.03.2021 அன்று நேரில் சந்தித்தனர்.
தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் போட்டியாளர்கள் துபாய் போட்டிக்கு செல்ல டிக்கெட் மற்றும் விசா கிடைத்திட உடனடியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூலம் உதவினார்.
துபாய் சென்று போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றுள்ளனர்.
துபாயிலிருந்து தமிழகம் திரும்பிய வீரர்கள் கோப்பையுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்துக்களைப் பெற்றனர்.