Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“ஹெய் வெசோ” படம் பிரமாண்ட தொடக்கம்

தீவிரத்தன்மையையும், தெய்வீக சக்தியும் இருப்பதை வலியுறுத்துகிறது.

படம் இன்று பிரமாண்ட விழாவுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டது. ஹீரோ நிகில் டைட்டிலை வெளியிட்டார். பன்னி வாசு (Bunny Vasu) திரைக்கதைப் பிரதியை வழங்கினார். இயக்குநர்கள் வசிஷ்டா (Vassishta) , சந்தூ மொண்டேட்டி (, Chandoo Mondeti) , மெஹர் ரமேஷ் ( Meher Ramesh )கேமரா ஸ்விட்ச் ஆன் செய்தனர். VV வினாயக் முகூர்த்தக் காட்சிக்கு க்ளாப் அடித்தார். இயக்குநர் பிரசன்னா குமார் முதல் காட்சிக்கு “ஆக்சன்” கூறினார்.

நடாஷா சிங் (Natasha Singh) , நக்‌ஷா சரண் (Naksha Saran) ஆகியோர் ஹீரோயின்களாகவும், பிரபல கன்னட நடிகை அக்‌ஷரா கவுதா (Akshara Gowda) முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர்.

இளம் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழு இந்த படத்தில் பணியாற்றுகிறது. அனுதீப் தேவ் (Anudeep Dev) இசையமைக்க, சுஜாதா சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். சோட்டா K பிரசாத் (Chota K Prasad) எடிட்டிங், பிரஹ்மா கடலி ( Brahma Kadali )ஆர்ட் டைரக்சன், சிந்தா ஸ்ரீனிவாஸ் எழுத்து ஆகிய பணிகளை மேற்கொள்கிறார்கள்.

“ஹெய் வெசோ” படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ளது.

*நடிகர்கள்* : சுதீர் ஆனந்த், சிவாஜி, நடாஷா சிங், நக்‌ஷா சரண், அக்‌ஷரா கவுதா, மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

தயாரிப்பு நிறுவனம்: வஜ்ர வராஹி சினிமாஸ்
தயாரிப்பாளர்கள்: சிவா சேர்ரி – ரவிகிரண்
இயக்குநர்: பிரசன்னா குமார் கோட்டா
இசை: அனுதீப் தேவ்
ஒளிப்பதிவு: சுஜாதா சித்தார்த்
எடிட்டிங்: சோட்டா கே பிரசாத்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: பிரம்ம கடாலி
பாடல்கள்: ராமஜோகைய்யா சாஸ்த்ரி
எழுத்து: சிந்தா ஸ்ரீனிவாஸ்
உடை வடிவமைப்பு: ரஞ்சிதா குவ்வலா
நடன அமைப்பு: விஜய் போலாகி
ஸ்டண்ட்: ப்ருத்வி
லைன் புரொட்யூசர்: உதய் நந்திபட்டி
மார்க்கெட்டிங்: மனோஜ் வல்லூரி (Hashtag Media)
பிரசாரக் கலை: தானி ஆலே
மக்கள் தொடர்பு: யுவராஜ்

Related posts

Prabhu Deva starrer PoikkalKuthirai crosses 1 Million + views

Jai Chandran

Electrifying massy dance number RRR Mass Anthem

Jai Chandran

யாஷ்: ‘டாக்ஸிக்’ ஒரு புதுமையான கேங்ஸ்டர் அனுபவம்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend