படம்: குட்நைட்
நடிப்பு: மணிகண்டன், மேத்தா ரகுநாத், ரமேஷ் திலக் பாலாஜி சக்திவேல், உமா ராமச்சந்திரன், ரைச்சல் ரெபாக்கா, ஶ்ரீ ஆரத்தி, பக்ஸ், கவுசல்யா நடராஜன் , ஜெகன் கிருஷ்ணன்,
தயாரிப்பு: நாசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன்,
இசை: சீன் ரோல்டன்
ஒளிப்பதிவு: ஜெயந்த் சேதுமாதவன்
இயக்கம்: விநாயக் சந்திரசேகரன்
பி ஆர் ஒ: யுவராஜ்
அம்மா, அக்கா, மச்சான், தங்கை என குடும்ப சகிதமாக வசிக்கி றான் மோகன் (மணிகண்டன்). நடுத்தர குடும்பமாக இருந்தாலும் சந்தோஷத்துடன் வாழ்கின்றனர். ஆனால் மோகனுக்கு தூங்கும் போது குறட்டைவிடும் பழக்கம் இருப்பதால் அவனை மோட்டார் மோகன் என்று கிண்டல் செய்கின் றனர். அவனை காதலிப்பதாக சொல்லும் பெண்ணும் குறட்டை சத்தம் தாக்குப்பிடிக்காமல் பிரேக்கப் செய்துவிட்டு எஸ்ஸாகி றாள். மச்சானுடன் (ரமேஷ் திலக்) ஆர் ஓ தண்ணீர் மோட்டார் ரிப்பேர் செய்யச் செல்லும் இடத்தில் அனுவை (மேத்தா) சந்திக்கிறான் மோகன். இவன் செய்யும் சேட்டைகள் அனுவைக் கவர ஒரு கட்டத்தில் குடும்ப சகிதமாக பேசி திருமணம் செய்கின்றனர். முதலிரவில் மோகன் விடும் குறட்டை சத்தம் கேட்டு அதிர்ந் தாலும் அதை அனு வெளிக்காட் டாமல் இயல்பாக இருக்கிறாள். குறட்டை சத்தத்தால் பல நாள் தூக்கத்தை இழக்கும் அனு திடீர் மயக்கமாகிறாள். மனைவியின் தூக்கம் கெட்டதற்கு தான் விடும் குறட்டைத்தான் காரணம் என்பதால் ஒரே வீட்டிலிருந்தாலும் வேறு அறையில் தனியாக தூங்கு கிறான் மோகன். ஆனால் தனக்கு குறட்டையால் எந்த தொந்தரவும் இல்லை தன் அருகிலேயே படுக்க கேட்கிறாள் அனு. இது மனஸ்தாப மாக மாறி இருவரும் பிரியும் சுழல் எழுகிறது. இவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பதற்கு கலகலப் புடன் பதில் சொல்கிறது கிளை மாக்ஸ்.
எதார்த்தமான நடிகர் என பெயர் வாங்கியிருக்கும் மணிகண்டன் இந்த படத்தில் அதை மீண்டும் நிரூபித்திருப்பதுடன் எந்த ஹீரோவும் ஏற்க தயங்கும் குறட்டை விடும் கதாபாத்திரம் ஏற்று சீனுக்கு சீன் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
மேத்தா வீட்டுக்கு செல்லும் மணிகண்டன் அங்கு சின்ன பிள்ளைப்போல் மாடிப்படி சுவரில் சறுக்கி விளையாடுவதும் அதை மேத்தா பார்த்ததும் வெட்கப்பட்டு சமாளிப்பதும் கைதட்டலை அள்ளுகிறது.
மனைவியின் தூக்கம் கெடக் கூடாது என்பதற்காக தனி அறையில் தூங்கச் செல்லும் மணி கண்டன் அங்கும் குறட்டை விட்டு குட்டி நாயை பயந்து ஓடச் செய்வது குபீர் சிரிப்பை வரவழைக்கிறது.
கணவனுக்கு அடங்கிய பெண் ணாக மட்டுமல்லாமல் அவன் மனம் நோகக்கூடாது என்பதற்காக குறட்டை சத்தத்தையும் சட்டை செய்யாமல் குடும்பம் நடத்தும் மேத்தா. இந்த காலத்தில் இப்படியும் ஒரு பெண்ணா என்று முணுமுணுக்க வைக்கிறார்.
தான் ராசி இல்லாத பெண் என்று தனக்கு தானே நொந்துக் கொண்டு மனதுக்குள் புழுங்கும் மேத்தா நடிப்பில் பவுண்டரி அடிக்கிறார்.
மணிகண்டனுக்கு ஒரு நல்ல மச்சானாக வருகிறார் ராஜ் திலக். மணிகண்டன் மனம் உடையும் போதெல்லாம் அவருக்கு தைரியம் சொல்லி ஆறுதல் தரும் நண்ப னாக மாறுவது மனதை தொடு கிறது.
பாலாஜி சக்திவேல் தொடங்கி படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் அந்தந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.
சில படங்கள் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்படலாம் ஆனால் அது கதையை பொறுத்து பெரிய படமாகிவிடும். அந்த வரிசையில் குட்நைட் படத்திற்கு இடமுண்டு.
சீன் ரோல்டன் இசையும், ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவும் மெருகு.
ஈ யை வைத்து ராஜமவுலி படம் எடுத்தார் அதேபோல் விநாயக் சந்திரசேகரன் குறட்டையை வைத்து படம் இயக்கியிருக்கிறார். எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லியிருப்பதால் ஸ்கிரீனில் தவிர அரங்கில் எங்கும் குறட்டை சத்தம் கேட்கவில்லை.
குட்நைட் – சிறு சிறு விஷயங் களுக்கு கோபித்துக்கொண்டு பிரிந்து வாழும் தம்பதிகள் இப்படத்தை பார்த்தால் மீண்டும் இணைவார்கள்.