Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கஸ்டடி ( பட விமர்சனம்)

படம்: கஸ்டடி

நடிப்பு: நாக சைதன்யா,
கிரித்தி ஷெட்டி, சரத்குமார், சம்பத், அரவிந்தராஜ், ஜீவா ( கெஸ்ட் ரோல்), பிரியாமணி, ராம்கி, பிரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், ஜெயபிரகாஷ், ரவிபிரகாஷ்,
சாய்சீனிவாஸ், கோபு ராஜு ரமணா, காதம்பரி கிரண், நிஹாரியா

தயாரிப்பு: சீனிவாச சித்தூரி, பவன் குமார்

இசை: இளையராஜா, யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: எஸ் ஆர் கதிர்

இயக்கம்: வெங்கட் பிரபு

பி ஆர் ஓ; சுரேஷ் சந்திரா, ரேகா (D one)

பெண் முதல்வர் ( பிரியா மணி) செய்யும் கொலை யை நிரூபிக் கவும், அந்த குற்றத்தை மறைக்க உதவிய ரவுடியையும் ( அரவிந்த் சாமி) மடக்கி பிடிக்க சி பி ஐ அதிகாரி சம்பத் களம் இறங்கு கிறார். அரவிந்த்சாமியை பிடித்து அழைத்து வரும்போது நடக்கும் சிறு விபத்தால் அவர்கள் இருவரையும்.போலீஸ் கான்ஸ்டபிள் நாக சைதன்யா பிடித்து லாக்கப்பில் வைக்கிறார். அங்கு வரும் இன்ஸ்பெக்டர் அவர்கள் இருவரையும் கொல்ல முயல அவரிடமிருந்து இருவரை யும் தப்பிக்க வைப்பதுடன் சிபிஐயின் திட்டப்படி அரவிந்த் சாமியை கோர்ட்டில் ஒப்படைக்க அழைத்துச் செல்கிறார் நாக சைதன்யா. அவர்களை கொல்வ தறகு நாலா புறமும் போலீஸ் ரவுடி என அத்தனை பேரும் துரத்துகின் றனர். இந்த போராட்டத்தில் யார் பிழைக்கிறார்கள் யார் சாகிறார்கள் என்பதெல்லாம் படத்தை ஒட்டு மொத்தமாக ஆக்ஷன் கிளைமாக்சில் கொண்டு சென்று நிறுத்துகிறது.

தமிழில் முதன்முறையாக ஹீரோ வாக அறிமுகமாகிறார் நாக சைதன்யா. அவருக்கு தூணாக சரத்குமார். அரவிந்த்சாமி, சம்பத், ஜீவா ராம்கி என பெரிய நட்சத்திர பட்டாளமே கைகோர்த்திருக்கிறது. அத்துடன் வெங்கட் பிரபு இயக்கம், இளையராஜா, யுவன் சங்கர் ராஜா என்ற பிராண்டும் இணைந்தி ருப்பது பலம்தான்.

படத்தின் முதல் பகுதி கொஞ்சம் அயாசப்பட வைக்கிறது. இரண்டாம் பகுதி முழுக்க ஆக்ஷன் அதிரடியாக அரங்கை அதிர வைக்கிறது.

சாக்லேட் பாயாக இருந்த நாக சைதன்யா ஆக்ஷன் அவதாரம் எடுத்து ஆனால் தெறிக்க விடுகி றார். சரத்குமார், அரவிந்த்சாமி என ஜாம்பவான்களிடமும் துணிச்ச லாக சண்டை காட்சிகளில் மோதுகிறார் நாக சைதன்யா ஆனால் அதற்கேற்ப தனது உடற்கட்டை பில்டப் செய்து வெயிட் போட்டிருந்தால் ஆக்ஷன் காட்சிகள் பெரிதாக எடுபட்டிருக்கும். அடுத்த முறை ஆக்ஷன் காட்சி களில் நடிக்கும்போது இதை நாக சைதன்யா ஞாபகத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

போலீஸ் உயர் அதிகாரியாக வரும் சரத்குமார் நெகடிவ் வேடமேற்று வெளுத்திருக்கிறார். ஆஜானபாகு தோற்றத்தில் நாக சைதன்யாவை அநாயிசமாக தூக்கி வீசுவதும், ஜீப்பில் சென்றபடி ஓடும் ரெயிலில் பாய்ந்து ஏறுவதுமாக அப்ளாஸ் அள்ளுகிறார்.

ராம்கி திடீரென்று எந்திர துப்பாக்கியுடன் ஜீப்பில் சீறிவருவது ஷாக். கெஸ்ட் ரோலில் வந்து காதல் டச் கொடுத்து விட்டு செல்கிறார் ஜீவா.

புல்லட்டு பாடலுக்கு வாரியரில் ஆட்டம் போட்ட கிரித்தி இதில் ஆட்டத்தை காட்டாமல் ஏமாற்றி யிருக்கிறார்.

“தனி ஒருவன்” படத் துக்கு பிறகு அசத்தலான நடிப்பால் கவர்கிறார் அரவிந்த் சாமி. துப்பாக்கி முனையில் மிரட்டும்போதும் தீப்பெட்டி இருக்கா என்று கேட்டு ஸ்டைல் நடிப்பில் அசத்துகிறார்.

காமெடிக்கு பிரேம்ஜியை தனியாக விட்டதற்கு பதில் ஒரே சீனில் வந்தாலும் “இது தமிழா நீ போ” என்று நக்கலடிக்கும் வெண் ணிலா கிஷோரையும் இருமொழி யிலும் பயன்படுத்தியிருந்தால் ஹைலைட்டாக அமைந்திருக்கும்.

முதல்வராக பிரியாமணி நடித்தி  ருக்கிறார். இன்னும் கூட அவரிடம் மிரட்டல் நடிப்பு வாங்கியிருக்க லாம்.

தயாரிப்பு:சீனிவாச சித்தூர், பவன் குமார்

இளையராஜா, யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் மிரட்டுகின் றனர். ஆனால் இளைய ராஜாவிட மிருந்து ஒரு மெலடி மெட்டு மிஸ்ஸாகியிருக்கிறது.

எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு ஆக்ஷன் மூடுடன் காட்சிகளை நகர்த்து கிறது.

வெங்கட்பிரபுவிடமிருந்து ஒரு அதிரடி ஆக்ஷன் படம் எதிர்பாராத ஷாக் தான்.

கஸ்டடி – ஆக்ஷன் பிரியர்களை கஸ்டடி எடுக்கும்.

 

Related posts

லாக் பட விழா: பாக்யராஜிடம் எம் ஜி ஆர் கேட்ட கேள்வி

Jai Chandran

டெட்பூல் – வால்வரின் சூப்பர் ஆக்ஷ்ன் ஷூட்டிங்

Jai Chandran

Vishal at Thirumala Thirupathi Devasathanam

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend