மேடைகள், டிவிக்களில் பயணம் தொடங்கி அம்புலி, ஆஹா, ஜம்புலிங்கம் 3டி போன்ற திரைப் படங்களில் நடித்திருப்பவர் கோகுல்நாத், இவர் குட்டா என்ற நடன பள்ளி நடத்துகிறார். அதன் மூலம் 4 கின்னஸ் சாதனை செய்ததுடன் அவரது மாணவ, மாணவிகளும் கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளனர்.
ஜிம்னாஸ்டிக், சிலம்பாட்டம், நடனம், ஜிம்னாஸ்டிக் செய்தபடி இடுப்பு – கால்களில் வளையம் சுழற்றுத்தல் போன்ற பல கலைகளுக்கு பயிற்சி அளிக்கிறார். கோகுல்நாத் மற்றும் அவரது மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 14 பேர் ஜிம்னாஸ்டிக் செய்தபடி இடுப்பு, கால் மற்றும் தலைகீழாக நின்றபடி பாதம் ஆகியவற்றில் வளையம் சுழற்றும் கலைகளில் கின்னஸ் சாதனை நிகழ்த்தினர். இதில் கோகுல்நாத் நோஸ் ஹூப்பிங் உள்ளிட்ட 4 கலைகளில் சாதனை நிகழ்த்தி கைநிறைய 4 கின்னஸ் சான்றிதழ் பெற்றி ருக்கிறார்.
மேலும் மாணவர் கள் சாஜன், எஸ்.டி.திவாகர், பயிற்சியாளர் கே.நாகராஜ், மாணவிகள் ஆண்ட்ரியா வர்கிஸ், எஸ். ரியானா ஆண்ட்ரியா, ஏ.எஸ்.ஐஸ்வர் யா, வைணவி சரவணன், எம்.சக்தி பூரணி, கரிமா பன்சாரி, எம்.வி.திவினா ஸ்மிரிதி, வி.மோனிஷா, ஜே.ஜெஸ்ஸிகா. லக்ஷிதா ராஜேஷ் ஆகியோர் கின்னஸ் சான்றிதழ்கள் பெற்றனர்.
அவர்களுக்கு குட்டா பயிற்சி பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இதில் படையப்பா, தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், காக்க முட்டை, கனா போன்ற பல படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளை வாழ்த்தி பேசினார்கள்.
இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது:
அந்த காலத்தில் என் அப்பா இதுபோன்ற விளையாட்டு எனக்கு சொல்லித்தரவில்லை இன்றைக்கு பெற்றோர்கள் பிள்ளைகளை ஜிம்னாஸ்டிக் போன்றவற்றை கற்க அனுப்பு வது பாராட்டுக்குறியது. முன்பெல்லாம் கின்னஸ் சாதனை செய்தவர்கள் பற்றி கேள்விப்படுவோம் அல்லது பத்திரிகையில் படிப்போம் ஆனால் இப்போது நம் பக்கத்து வீட்டு பிள்ளைகள் கின்னஸ் சாதனை செய்திருப் பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும் பெருமை யாகவும் இருக்கிறது. இத்தைய பயிற்சிகளை அளித்த கோகுல் நாத்தும் கின்னஸ் சாதனை செய்திருப்பது பாராட்டத் தக்கது. கோகுல்நாத் இன்னும் பெரிய சாதனைகளை செய்வார். இந்த நிகழ்ச்சிக்கு பி ஆர் ஓவக இருக்கும் நிகில் முருகன் இப்போது படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவரும் பன்முக திறமை கொண்டவர்.
இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் பேசினார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது கூறியதாவது:
கோகுல்நாத்தை மானாட மயிலாட நிகழ்ச்சியிலிருந்தே எனக்கு தெரியும். அப்போதே அவர் எதை செய்தாலும் வித்தியாசமாக செய்வார். அடிக்கடி அவர் வீடியோக்கள் பதிவிடுவார். அதுவும் வித்தியாசமானதாக இருக்கும் இன்றைக்கு அவர் மட்டுமல்ல அவரது மாணவ, மாணவி களும் கின்னஸ் சாதனை செய் திருக்கின்றனர். இங்கு சிலம்பம் சுழற்றியதையும், ஜிம்னாஸ்டிக் செய்ததையும் பார்த்தபோது எனக்கு அந்த ஆசை வந்துவிட்டது. சிலம்பம் சுழற்றவும் ஜிம்னாஸ்டிக் கற்கவும் முடிவு செய்துள்ளேன். பெண்கள் உறுதியாக இருப்பதை கண்டால் எனக்கு பிடிக்கும். பெற்றோர்கள் இதுபோன்ற விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்கு விக்க வேண்டும். நான் சிறுவயதில் நீச்சல் பயிற்சி நிறைய செய்வேன். ஜிம்மானிஸ்டிக்கை இங்குள்ளவர்கள் 2 வருடமாக செய்கிறார்கள் என்றார்கள், என்னால் அவ்வளவு நாள் கற்க முடியாது 2 மாதத்தில் கற்க விரும்புகிறேன்’ என்றார்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கோகுல்நாத், பி ஆர் ஓ நிகில் முருகன் ஆகியோர் வரவேற்றனர். பெற்றோர்கள் சார்பில் கோல்நாத்துக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது. கே.எஸ்.ரவிகுமார். ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னிலையில் மாணவ, மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.