ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வந்தார். இந்நிலையில் படப்பிடிப் பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதை யடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருந்த ரஜினிக்கு நேற்று ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. உடடியக அவர் ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக நேற்று மருத்துமனை அறிக்கை தெரிவித்தது.
இன்று காலை அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து 2வது அறிக்கை வெளி யிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
ரஜினிகாந்த் நேற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். அவரது உடல்நிலை யில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவருக்கு நேற்று இரவு அசாதாரணமாக இருந்தது. ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாக உள்ளது. ஆனால் நேற்றைவிட இன்று கட்டுக்குள் உள்ளது. அவருக்கு நடந்த பரிசோதனையில் பயப்படும்படி எதுவும் இல்லை. இன்று மேலும் சில சோதனைகள் செய்ய வேண்டி உள்ளது மாலையில் அதற்கான ரிசல்ட் கிடைக்கும்,
ரத்த அழுத்தத்திற்காக அவருக்கு தரப்படும் மருந்துகள் மிகுந்த கவனத் துடன் கையாளப்படுகிறது. தொடர்ந்து அவர் கண்காணிப் பில் உள்ளார். அவருக்கு முழு ஓய்வு தேவை என்று பரிந்து ரைக்கப்பட்டிருக்கிறது. அவரை சந்திக்க பார்வையா ளர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது. பரிசோதனை முடிவை பொருத்தும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரவதை பொருத்தும் அவரை டிஸ்சார்ஜ் செய்வதுபற்றி முடிவு மாலையில் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ரஜினிகாந்த் விரைந்து குணம் அடைய தெலங்கான கவர்னர் தமிழிசை சவுந்தராஜன், ஆந்திர முன்னாள் முதல் சந்ந்திரபாபு நாயுட, மக்கள் நீதி மய்யம தலைவர் நடிகர் கமல்ஹாசன், நடிகர் பவன் கல்யாண் போன்றவர்கள் வாழ்த்து தெரிவித்து மெசேஜ் வெளியிட்டனர்.