Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திரைப்பட இசை கலைஞர்கள் யூனியன் தேர்தல்: தினா அறிக்கை

திரைப்பட இசை கலைஞர்கள் யூனியன் தேர்தல் நடந்தது. இதில் தினா மற்றும் அவரது தலையிலான அணி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

இதுபற்றி இசை கலைஞர்கள் யூனியன் தலைவர் தினா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
திரைப்பட இசைக்கலைஞர் கள்‌ சங்கத்தின்‌ தேர்தல்‌ 2021-ஜனவரி 24 ஆம்‌ தேதி அன்று, வடபழனி ஆற்காடு ரோட்டில்‌ உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள்‌ சங்க வளாகத்தில்‌ நடந்தது. இதில்‌ தினா தலை மையிலான அணி பெரும்பா லான வாக்குக ளை பெற்று மகத்தான வெற்றி பெற்றது.
திரைப்பட இசைக்கலைஞர் கள்‌ சங்க தலைவராக மீண்டும்‌ இசையமைப்பாளர்‌ தினா அதிக வாக்குகள்‌ பெற்று வெற்றி அடைந்தார்‌. அவரது அணியை சேர்ந்த ஜோனாபக் தகுமார்‌ எஸ்.டி.
பொதுச்செயலாளராகவும்‌ , ஐ.மகேஷ்‌‌ பொருளாளராகவும்‌ தேர்ந்தெடுக்கப்பட்டனர்‌.
துணைத்தலைவர்கள்‌ , இணைச்செயலாளர்கள்‌, பொதுக்குழு உறுப்பினர்கள்‌ என தினா அணியை சேர்ந்த அனைவரும்‌ தேர்ந்தெடுக்கப் பட்டனர்‌.
இந்த தேர்தலில்‌ இசையமைப் பாளர்‌ ஹாரிஸ்‌ ஜெயராஜ்‌, டி. இமான்‌, தேவி ஸ்ரீ பிரசாத்‌ , சபேஷ்‌ முரளி, இசைக்கலை ஞர்கள்‌ சங்க முன்னாள்‌ தலைவர்‌ எஸ்.ஏ.ராஜ்குமார்‌ , இயக்குனர்‌, எழுத்தாளர்‌,
இசையமைப்பாளர்‌ ,கே. பாக்யராஜ்‌ , வாசு ராவ்‌, சம்பத்‌ செல்வம்‌ , பரணி, சிற்பி , ரமேஷ்‌ விநாயகம்‌, சி. சத்யா , மாதவபெத்தி சுரேஸ்‌, எஸ்.பி.வெங்கடேஷ்‌ , நரஹரி, தஷி, ஸ்ரீ காந்த்‌ தேவா, ஹரி
கிருஷ்ணா தாஜ்‌ நூர்‌, சிவாஜி ராஜா, வயலின்‌ கலைஞர்‌ கல்யாண சுந்தரம்‌ , சாக்ஸ்‌ கலைஞர்‌ எம்.எஸ்.வி. ராஜா, செல்லலோ கலைஞர்‌ குன்னக்குடி வைத்யநாதன்‌ புதல்வர்‌ வி ஆர்.சேகர்‌, கிதார்‌ கலைஞர்‌ சந்திர சேகர்‌ , பாடகர்‌ கிருஷ்ண ராஜ்‌, எஸ்.என். சுரேந்தர்‌ , கல்பனா ராகவேந் தர்‌ , மாலதி லக்ஷ்மன்‌, கிரேஸ்‌ கருணாஸ்‌, பத்மலதா. ஸ்ரீனிவாஸ்‌. கீ போர்டு கலைஞர்‌ தினேஷ்‌ , கிரண்‌ அனைவரும்‌ கலந்து கொண்டு வாக்கு பதிவு செய்தனர்‌.
தேர்தல்‌ அதிகாரியாக இயக்கு னர்‌ டி.கே. சண்முக சுந்தரம்‌‌, துணைத்தேர்தல்‌ அதிகாரியாக ரமேஷ்‌ பிரபாகரன்‌, தேர்தலை அமைதியான முறையில்‌ சிறப் பாக நடத்தி தந்தனர்‌ .ஒட்டு மொத்த இசைக்கலைஞர் களும்‌ தினா தலைமையிலான அணி வெற்றி பெற்றதில்‌ பெரு மகிழ்ச்சி அடைந்துள்ள னர்‌ இவர்கள்‌ பதவி ஏற்பு நிகழ்ச்சி பெப்சி தலைவர்‌ செல்வமணி முன்னிலையில்‌ விரைவில்‌ நடக்கவிருக்கிறது
இவ்வாறு தினா கூறி உள்ளார்.

Dheena Elected as President, தினா தலைவராக மீண்டும் தேர்வு,

Related posts

Producer G.k.Reddy wins 3 Medals during the recent Athletics Meet

Jai Chandran

ஒரே இரவில் ஹன்சிகாவாக மாறிய யோகிபாபு

Jai Chandran

அவள் பெயர் ரஜ்னி (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend