Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தனுஷ் நடிக்கும் ’கர்ணன்’ ஏப்ரல் மாதம் தியேட்டரில் ரிலீஸ் எஸ்.தாணுவுக்கு நன்றி

தனுஷ் நடிக்க மாரி செல்வராஜ் இயக்கத்தில்உருவாகும் படம் கர்ணன். இப்படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

இதில் தனுஷ் ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். யோகிபாபு, நட்டி, லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். தேயிலை தோட்ட தொழிலா ளர்கள் பற்றிய கதையாக உருவாகி இருக்கிறது.

தயாரிப்பாளர் எஸ்.தாணுவுக்கு கர்ணன் பட ஹீரோ  தனுஷ்  நன்றியும் கடிதம் அனுப்பினார். அதில் கூறியிருப்ப தாவது:
ஏப்ரல் மாதம் கர்ணன் படம் தியேட்டரில் வெளியாகிறது. இது இன்றைய காலகட்டத் துக்கு மிகவும் தேவையான விஷயம் மட்டுமல்ல ஊக்கம் தருவதாகவும் உள்ளது. தியேட்டர் அதிபர்கள், டிஸ்டிரி பியூட்டர்கள் மற்றும் அவர் களை சார்ந்து வாழும் அனை வரின் நலனை கருத்தில் கொண்டு இப்படத்தை தியேட்டரில் வெளியிடும் தாணு சாருக்கு நன்றி. என்னு டைய ரசிகர்கள் சார்பிலும் தாணுசாருக்கு பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது அன்பு வணக்கம், அன்பை பரப்புங்கள்.
இவ்வாறு தனுஷ் கூறி உள்ளார்.

Related posts

தேஜா சஜ்ஜாவின் ஹனு-மான் முதல் பார்வை போஸ்டர்

Jai Chandran

Harish Kalyan starrer “Parking” will release on Dec 1st

Jai Chandran

Prabhu as “Thillaiyar” Palanichamy

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend