Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஃபேமலி படம் (பட விமர்சனம்)

படம்: ஃபேமலி படம்

நடிப்பு: உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, சுபிக்ஷா, ஸ்ரீஜா ரவி, பார்த்திபன் குமார், மோகனசுந்தரம், அரவிந்த் ஜானகிராமன், ஆர் ஜே பிரியங்கா, சந்தோஷ்

தயாரிப்பு: கே பாலாஜி

இசை: அனிவி

ஒளிப்பதிவு,: மெய்யேந்திரன்

இயக்கம்: செல்வகுமார்

பிஆர்ஓ: நிகில் முருகன்

 

ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு குடும்ப படமாக வந்திருக்கிறது ஃ.பேமலி படம்.

அண்ணன் மற்றும்  இரண்டு தம்பிகள். இதில் மூத்தவர் வக்கீலாக இருக்கிறார், நடுதம்பி  பி பி ஓ வில் வேலை செய்கிறார். கடைசி தம்பி சினிமா உதவி இயக்குனராக இருந்து படம் இயக்குவதற்கு வாய்ப்பு தேடி அலைகிறார். ஒரு கட்டத்தில் அவமானப்படும் இளைய தம்பிக்காக தங்கள் குடும்பமே படம் தயாரிக்கும் என்று கூறி களத்தில் இறங்குகிறார் மூத்த அண்ணன் விவேக் பிரசன்னா.  அவரால் படம் எடுக்க முடிந்ததா ? அதை வெளியிட முடிந்ததா?  என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

சிறிய பட்ஜெட்டில் ஒரு நல்ல படத்தை எடுக்கலாம் என்று குடும்பமே சேர்ந்து எடுத்த முடிவுதான் இந்த, ஃபேமலி படம். அதாவது படத்தின் தயாரிப்பாளர் மூத்த  அண்ணன்,  படத்தில் நடு தம்பியாக நடித்திருக்கிறார் உடன் பிறந்த தம்பி  படத்தை இயக்கியிருப்பவர் மற்றொரு உடன்பிறந்த தம்பி. குடும்பமே சேர்ந்து எடுத்ததால் இந்த படத்திற்கு ஃபேமிலி படம் என்று பெயர் வைத்து விட்டார்களோ என்னவோ டைட்டிலுக்கு  டைட்டிலுமாச்சு, படத்துக்கு படமுமாச்சு.

படத்தில் மூத்த அண்ணனாக விவேக் பிரசன்னா தனது நடிப்பின் மூலம் பொறுப்பான அண்ணனாக மனதில் பதிகிறார்.

ஹீரோவாக நடித்திருக்கும் உதய் கார்த்திக் படத்தில் இளைய தம்பியாக நடித்திருக்கிறார். உதவி இயக்குனராக இருக்கும் இவர் படத்தை டைரக்ட் செய்யப் போகிறேன் என்று சொல்லி கம்பெனி கம்பெனியாக ஏறி காலத்தை கழிப்பதுதான் மிச்சமாகிறது. ஒரு கட்டத்தில் அவர் தயாரிப்பாளர் ஒருவரால் ஏமாற்றப்படும்போது இதன்பிறகு அவரது கதை முடிந்தது என்று பார்த்தால் குடும்பத்தின் சப்போர்ட்டால் மீண்டும் உயிர்ப்பெறுவது  படத்தை சுவாரஸ்யமான இடத்துக்கு  நகர்த்துகிறது.

கையில் போதிய பணம் இல்லாமல் விவேக் பிரசன்னா எப்படி படம் எடுக்க போகிறார் என்று பார்த்தால் அதையே  முழு கதையாக்கி படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இயக்குனர் செல்வகுமார்.

படத்தில் இந்த காட்சி நன்றாக இருக்கிறது, அந்த காட்சி நன்றாக இருக்கிறது என்று சொல்வதற்கு ஸ்பெஷல் காட்சிகள் எதுவும் கிடையாது.  வாழ்க்கையின் எதார்த்தத்தை அப்படியே காட்சிகளாக்கி இருப்பது ஒரு வகையில் படத்துக்கு பிளஸ் ஆக அமைகிறது.

கதாநாயகி சுபிக்ஷா ஒரு சஸ்பென்ஸ் பாத்திரத்தில் வருகிறார், நடுத்தம்பியின் காதலியாக வரும் ஜனனி செண்டிமெண்ட் காட்சிகளில் நடித்து மனதில் இடம் பிடிக்கிறார்.

படமே பட்ஜெட் படம் அதனால் படத்தில் எடுக்கப்படும் படம்  கூட பட்ஜெட்டில் எடுத்து முடிக்கிறார்கள். கதையும் கருவும் கை கொடுத்திருப்பதால். ரசிகர்கள் மனதில் இடம் கொடுப்பார்கள்.

30 வருடத்திற்கு முன்பு இயக்குனர் விசு,  சம்சாரம் அது மின்சாரம் என்ற படத்தில் தனிக் குடுத்தினம்தான் இப்போதைய வாழ்க்கை முறைக்கு சரியாக இருக்கும் என்று ஒரு தீர்வை சொன்னார், ஆனால் 30 வருடத்திற்கு பிறகு இப்பட இயக்குனர் கூட்டுக்குடும்பம் இந்த காலத்திற்கு பொருத்தமான சூழலாக  இருக்கும் என்று நம்பும்படி கூறியிருக்கிறார். ஆனால் எதார்த்தத்தில் இப்போதைக்கு கூட்டுக்குடும்பம் எங்கே இருக்கிறது என்பதை பூதக் கண்ணாடி வைத்து தான் தேடிப்  பார்க்க வேண்டி இருக்கிறது.

ஃபேமிலி படம்  – குடும்பத்துக்கு ஏற்ற படம்.

 

 

 

Related posts

உயர்ந்து வருவது கொரோனா மட்டுமல்ல.. ராகுல்காந்தி அட்டாக்.

Jai Chandran

படப்பிடிப்பில் வயிற்றை பார்த்து பேசிக் கொண்டிருந்த மிர்னால்

Jai Chandran

நடிகர் ஆர் என் ஆர் மனோகர் திடீர் மரணம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend