படம்: எதற்கும் துணிந்தவன்
நடிப்பு: சூர்ய, சத்யராஜ், வினய், பிரியங்கா மோகன், சரண்யா, சூரி, இளவரசு, வேல் ராமமூர்த்தி, எம் எஸ்,பாஸ்கர், தேவதர்ஷினி, புகழ்
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: ரத்னவேல்
இயக்கம்: பாண்டிராஜ்
பி ஆர் ஒ :யுவராஜ்
வடநாடு தென்நாடு என்று அருகருகே உள்ள இரு ஊர்களுக்கு இடையே பெண் கொடுத்து பெண் எடுக்கும் வழக்கம் பல காலமாக நடந்துவரும் நிலையில் இரு ஊரில் உள்ள காதல் ஜோடிக்கிடையே ஏற்பட்ட மோதலால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கி றார். இரு ஊருக்கும் இடையே பகை ஏற்படுகிறது. இரு ஊரிலிருந்தும் யாரும் காதல் ஜோடிகளுக்கு அனுமதி தருவதில்லை என முடிவாகிறது. இந்நிலையில் தென்நாடு ஊரை சேர்ந்த வக்கீல் கண்ணபிரானுக்கும் (சூர்யா) வடநாடு ஊரை சேர்ந்த ஆதினிக்கும் (பிரியங்கா மோகன்) காதல் மலர்கிறது. இந்த காதலை பிரித்து வேறுவொரு வனுக்கு ஆதினியை திருமணம் செய்து வைக்க எண்ணுகிறான் இன்பா. மத்திய அமைச்சரின் மகனான இன்பா செய்யாத அட்டூழியம் இல்லை. பெண்களை நைசாக பேசி அவர்களை விஐபிகளுக்கு விருந்துபடைப்பதுடன் அந்த பெண் களின் ஆபாச வீடியோவை எடுத்து வைத்து மிரட்டுகிறான். பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணபிரானிடத்தில் சொல்ல அவர்களை காப்பாற்ற இன்பா கூட்டத்தை எதிர்க்கிறார். ஒருகட்டத்தில் கண்ணபிரானின் மனைவி ஆதினியின் ஆபாச வீடியோவை ரகசியமாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுகிறான் இன்பா. இவனது அட்டுழியத்துக்கு கண்ணபிரான் எப்படி முடிவு கட்டுகிறார் என்பதே கிளைமாக்ஸ்.
சூர்யா ஆக்ஷன் அவதாரமாகியிருக் கிறார். கோட்டு போடட்டா வக்கீல், வேட்டி கட்டுனா ஜட்ஜ் என்ற பஞ்ச டயலாக் பேசி எதிரிகளை பந்தாடுகிறார். பட தொடக்கத் திலேயே வரிசையாக 5க்கும் மேற்பட்ட கொலைகள் செய்து அதிரடி கிளப்பு கிறார். அதற்கான பிளாஷ்பேக்காக படம் தொடர்கிறது.
என்ட்ரி பாடல் சூர்யா ரசிகர்கள் விசிலடித்து ஆட்டம்போட செம பாட்டாக அமைந்திருக்கிறது
சூர்யா, பிரியங்கா காதலை நீட்டி முழக்காமல் ஒரு வீடியோ கால் மூலமாக இருவரும் மனம் பறிகொடுத்து காதலர்களாவது எமர்ஜன்ஸி காதலாக தெரிந்தாலும் கடைசிவரை நிலையான காதலாக இருப்பது வலு.
கோவில் கும்பாபிஷேகத்தில் பெண்ணை தூக்குறோம் என்று சூர்யா விடும் சவாலை கண்டு பிரியாங்காவின் தந்தை இளவரசு பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மகள் பிரியாங்காவுடன் கோவிலுக்கு வருவதும் அந்த இடத்தில் எதிர்பாராத விதமாக சூர்யா பிரியங்கா கழுத்தில் தாலி கட்டுவதும் ருசிகரம். அங்கு சூரி செய்யும் அலப்பறைகள் கலகலப்பு.
இன்பாவாக வில்லன் வேடம் ஏற்றிருக்கும் வினய் இருந்த இடத்திலி ருந்தே மிரட்டல் விடுக்கிறார். வினய்யின் ஒவ்வொரு மிரட்டலையும் துவம்சம் செய்கிறார் சூர்யா. ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றிலும் சூர்யா பட்டையை கிளப்பி இருக்கிறார்.
பெண்களின் பாலியல் உறுப்புகளை வைத்து அவர்களை மிரட்டும்போக்கை சிலர் நடத்தும் அக்கிரமங்களுக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டிருக்கிறது. தன் மனைவியின் வீடியோ வெளியாகும் என்று தெரிந்தும் அதற்காக தயங்காமல் வினய் கூட்டத்தின் முகமூடியை பிரியாங்காவின் பகிரங்க வாக்குன மூலத்தின் மூலம் சூர்யா தவிடுபொடி யாக்கும்போது இதுபோன்ற சூழலில் சிக்கி இருக்கும் பல பெண்களுக்கு தைரியத்தை தரும்.
சூர்யாவின் தந்தையாக சத்யராஜ் நடித்திருக்கிறார். முறைப்பாகவும் இல்லாமல், சிரிப்பாகவும் இல்லாமல் இயல்பாக வாழ்ந்திருக்கிறார். சூர்யாவின் அம்மாவாக சரண்யா மேலும் எம் எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி தங்கள் பங்கை நிறைவு செய்திருக்கின்றனர். வரும்போதெல் லாம் சிரிக்க வைக்கிறார் சூரி.
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.
குடும்ப செண்டிமெண்ட்தான் இயக்குனர் பாண்டியாராஜின் ஸ்டைல். அத்துடன் சமூக கருத்தையும் பாலியல் சீண்டல் பற்றிய விவகாரத்தையும் ஆக்ஷன் அதிரடியுடன் ஆழமாகவே அலசி இருக்கிறார்.
டி.இமான் இசை சோடையில்லை.
ரத்ன வேல் கேமரா தனது சித்துவிளையாட்டை செய்திருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளின் கலர் டோன் காட்சிகளை தூக்கி நிறுத்துகிறது.
எதற்கும் துணிந்தவன் – துணிச்சல்காரன்.