Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

யுவன் வெளியிட்ட “எண்ணம் போல் வாழ்க்கை.” இசை ஆல்பம் யூ டியூப்பில் டிரெண்டிங்

TMJA(தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம்) சார்பில் எண்ணம் போல் வாழ்க்கை.. என்ற தனி இசை பாடல் ஆல்பம் தயாரானது

தமிழ் சினிமாவிலும், பத்திரிகை வரலாற்றிலும் முதல் முறையாக பிரபல நட்சத்திரங்களான
சசிகுமார், ஆர்யா, GVபிரகாஷ், சூரி, கிருஷ்ணா, அசோக் செல்வன், மகேந்திரன், யோகிபாபு, மைக்கேல், மஹத், குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், புகழ், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யாராஜேஷ், ஷெரின், ஜனனி, சஞ்சித்ஷெட்டி, ரைசா, சாக்‌ஷி அகர்வால், அதுல்யா, அம்மு அபிராமி என 20க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இதில் பாடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டி ஸ்டோரி புகழ் எட்வின் லூயிஸ் இசையில், கவிதாவின் வரிகளில், பிரீத்வி குரலில், சாண்டி நடனம் அமைக்க, தேசிய விருது பெற்ற எடிட்டர் சாபு ஜோசப் எடிட் செய்துள்ளார்..

“எண்ணம் போல் வாழ்க்கை”.. என பெயரிடப்பட்ட இந்த தனி இசை ஆல்பம், கொரானா கடந்து, தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் பாடல் அமைந்துள்ளது.
இப்பாடலுக்கு தணிக்கை சான்று பெறப்பட்டது.

இப்பாடலை யுவன் சங்கர் ராஜா தனதுயு1 ரெக்கார்டு நிறுவனம் சார்பில் வெளியிட்டார். இப்பாடல் வெற்றி பெற கலைப்புலி எஸ் தாணு தனது இணைய தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.
பாடகி பவதாரணி, இயக்குனர் விருமாண்டி, செல்வா கண்ணன், நடிகர்கள் உதயா, காளி வெங்கட், நடிகைகள் அதுல்யா ரவி, சுபிக்ஷா, ஸ்டண்ட் சில்வா, வாசுகி பாஸ்கர், நீயா நானா
கோபிநாத் சந்திரன் மற்றும் பாடலில் பங்குபெற்ற கலைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் வாழ்த்து தெரிவித்ததுடன் தங்களது சமூக வலை தள பக்கத்தில் பாடல் லிங்கை பதிவிட்டு வெற்றிக்கு வாழ்த்தினர் என்பது குறிப்பி
டத்தக்கது.
யூ டியூப்பில் இப்பாடல் டிரெண்டிங் வரிசையில் இடம் பிடித்தது.
தொடர்ந்து இப்பாடல் திரையலக பிரபலங்களால் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

வாழ்த்து தெரிவித்த பிரபலங்களுக்கு TMJA சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணக்கம்..கொரணா காலத்தில் ஒரு சிறிய அளவு எடுக்கப்பட்ட எண்ணம் போல் வாழ்க்கை பாடல் மக்கள் பலராலும் பாராட்டப்பட்டு, இன்று 1 லட்சம் பார்வையா ளர்களை குறுகிய காலத்தில் கடந்தது பெரும் மகிழ்ச்சி..இதற்கு உறுதுணையாக இருந்த அத்தனை திரை நட்சத்திரங்களுக்கும், யுவன் சங்கர் ராஜா, தாணு சார், பி.சி.ஸ்ரீராம் , சேரன், தனுஷ்,சீனு ராமசாமி , சி.வி.குமார், ராஜசேகர் பாண்டியன்,சதீஷ் நடிகர், விருமாண்டி, பவதாரணி, சுப்பு பஞ்சு, ஜான் கொக்கன்,சக்தி வேல், எஸ்.ஜே.சூர்யா, சுபிக்ஷா, உதயா, நிதின் சத்யா, கோபிநாத், செல்வகண்ணன், வாசுகி, அந்தோணி தாசன், அபிஷேக், ரிங்கு குப்தா, நிகில் முருகன், D one, பிலிமி ஸ்டீரிட், சினி உலகம், உட்பட அத்தனை பேருக்கும் எங்களது தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அன்பான நன்றிகள்…🙏🙏

 

 

 

#EnnamPolVazhkai song by @edwinlouisoffl

@U1Records @SasikumarDir @arya_offl @sooriofficial @Actor_Krishna @gvprakash @iYogiBabu @Actor_Mahendran @MahatOfficial @i_amak @KeerthyOfficial @aishu_dil @VijaytvpugazhO @jananihere @raizawilson @ssakshiagarwal @Ammu_Abhirami @AthulyaOfficial @SanchitaShettyy @kavithareporter @tmja140418

Related posts

அனுஷ்கா நடிக்கும் காத்தி ( Ghaati) பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Jai Chandran

கொரோனாவில் சிக்கிய உலக அழகி ஐஸ்வர்யாராய் மற்றும் குடும்பம்..

Jai Chandran

PrabhuDeva’s “Theal” Worldwide Releasing on January 14th in Theatre

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend