Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உண்மை சம்பவங்களுடன் பூசாண்டி வரான்

வெள்ளித்திரை டாக்கீஸ் தயாரிப்பாளர், நடிகர் முஜீப் தமிழகமெங்கும் வெளியிடும் பூசாண்டி வரான்…

ட்ரையம் ஸ்டுடியோ மலேசிய பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆண்டி தயாரித்துள்ள பூச்சாண்டி என்ற தமிழ் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி “பூசாண்டி வரான்” என்ற பெயரில் தமிழ்நாட்டில் வெளியாக இருக்கிறது. இப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மலேசியாவில் பூச்சாண்டி என்ற தலைப்பில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

ஜே கே விக்கி எழுதி இயக்கியுள்ள  இப்படத்திற்கு டஸ்டின் இசை அமைக்க, அசலிஷாம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பணியை இயக்குநர் ஜே கே விக்கியே செய்துள்ளார். இப்படத்தில், லோகன், தினேஷ், எஸ்.கிருஷ்ணன், கணேசன், மனோகரன், ரமணா, ஹம்ஷினி பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சில உண்மை சம்பவங்கள் பின்னணியோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த த்ரில்லர் படத்தை மலேசிய தமிழ் மக்கள் வெகுவாக ரசித்ததை போல தமிழக மக்களும் ரசித்து மகிழ்வார்கள் என்கிறது படக்குழு…

Related posts

“அவள் பெயர் தமிழரசி” பட கதாநாயகியின் “மாயமுகி”

Jai Chandran

கமல்ஹாசனின் காலில் காயம்.. ஆபரேஷன் செய்த இடத்தில் மிதித்த நபர் யார்?

Jai Chandran

பிரம்மாஸ்திரம் பாகம் 1 படத்தின் தென்னிந்திய பதிப்பு வழங்கும் ராஜமவுலி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend